அந்நாளில் பெண் குழந்தைகள் வயதுக்கு வரும்போது இதை செய்து கொண்டாடுவது நம் வழக்கம். இந்நாளில் அந்த வழக்கம் குறைந்து விட்டது.

0 547

இனிப்புபிட்டு

அந்நாளில் பெண் குழந்தைகள் வயதுக்கு வரும்போது பிட்டு செய்து கொண்டாடுவது நம் வழக்கம். இந்நாளில் அந்த வழக்கம் குறைந்து விட்டது. பாரம்பரிய இனிப்பு இந்த அரிசி பிட்டு.

தேவை
அரிசிமாவு– 1 கப்
வெல்லம்– 1 கப்
நெய்– ½ கப்
ஏலக்காய்—8
மிந்திரிபருப்பு—15
திராட்சை—15
தேங்காய்த்துருவல்– ½ கப்

செய்முறை
அரிசிமாவை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுக்கவும்.

½ கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் மஞ்சள்பொடி,
சிட்டிகை உப்பு சேர்த்து கை
பொறுக்கும் சூட்டில் வறுத்த
மாவில் சிறிது,சிறிதாக விட்டு பிசிறவும்.மாவு மொத்தையாகக்கூடாது.உதிராக இருக்க
வேண்டும்.

அதை ஒரு சல்லடையில் சலித்தால் கீழே கட்டி இல்லாமல்
விழும். இதை இட்டிலித்தட்டில்
அள்ளி வைத்து வெயிட்
போடாமல் ஆவியில்
வேகவிட்டு ஒரு தட்டில்
கொட்டவும். இதேபோல் எல்லா
மாவையும் வேகவிடவும்.

ஆறியதும் நன்கு உதிர்க்கவும். அத்துடன் துருவிய தேங்காய் சேர்த்து, ஏலக்காய்ப் பொடி
போட்டு கலக்கவும்.

வெல்லத்தை 1 கரண்டி
தண்ணீர் சேர்த்து பாகு
வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி
மீண்டும் பாகு
வைக்கவும். நல்ல கெட்டிப்பாகு(தண்ணீரில் ஒரு ஸ்பூன் பாகை விட்டால்
உருண்டு வரும். தொய்யக்கூடாது.)

பதம் வந்ததும் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உதிர்த்தபிட்டில் விட்டு வேகமாகக் கலக்கவும். பாகு நன்கு பரவியதும் கட்டியாகாமல்
கைகளால் நன்கு கலக்கவும். பிட்டு பாகுடன் சேர்ந்து
கொண்டு நன்கு உதிராக
வரும்.

நெய்யை சுடவைத்து அதில்
மிந்திரி,திராட்சை வறுத்துப் போட்டு நன்கு
கலக்கவும்.மணமணக்கும் பிட்டுவாயில் போட்டால் கரையும்.

சில குறிப்புகள்
*அரிசிமாவு நல்ல நைஸாக
இருக்க வேண்டும்.
*மாவை லேசான ப்ரௌன்
நிறம் வரும்வரை வறுக்க
வேண்டும்.
*கையால் கோலம் போடும்
பதமாக இருக்க வேண்டும்.
*வென்னீர் விட்டுப் பிசையும்போதே மாவு உதிராக இருக்க வேண்டும்.
*மொத்தையாக இருந்தால்
பிட்டு களி மாதிரி ஆகிவிடும்.
*பாகு நல்ல கெட்டிப் பாகாக இருக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.