என் பிள்ளைகளுக்கு என்ன அறிவுரை சொல்கிறேனோ அதைதான் இங்கே எழுதி இருக்கிறேன்.

0 217

முகநூலில் இயங்கும் இளம்பெண்களுக்கு:

முகநூல் நட்பு வட்டம் என்பது நம் உறவினர்கள், உங்களுடன் படித்த நண்பர்கள் என

யார் யாருடைய முகவரி, பெற்றோரை உங்களுக்கு அறிமுகம் ஆகியுள்ளதோ, யார் உங்கள் வீட்டுக்கு வந்து போயிருக்கிரார்களோ..அந்த எல்லையில் நிற்கும் வரை அது 100% பாதுகாப்பானது. பதிவுகளை பிரெண்ட் ஒன்லி என போட்டு எழுதி வந்தால் முகநூலில் உங்களுக்கு எந்த சிக்கலும் கிடையாது.

இப்படி செய்வதால் தினமும் 100 லைக்ஸ், குட்மார்னிங் வராது. ஆனால் ஆயிரக்கணக்கில் லைக்குகள் வருவது எல்லாம் ஒரு மாயை போதை. நீங்கள் இதுக்காக மெனகெட்டு எடுத்து போடும் புகைப்படங்களை ஒரே வினாடியில் பார்த்து சிரித்தபடி “லூசாப்பா இது” என மனதில் நினைத்தபடி ஒரு லைக்கை போட்டுவிட்டு கடந்து செல்லும் சமூகம் இது. அது அவர்கள் தவறல்ல…நாமும் அப்படித்தான் செய்வோம். நமக்கு இருக்கும் நேரம் குறைவு.

என்று உங்கள் பதிவுகளை பப்ளிக் ஆக்கி முன்பின் தெரியாவர்கள் (அவர்கள் எத்தனை பிரபலம் ஆக இருந்தாலும்) உங்கள் நட்புவட்டத்தில் சேர்க்கிறீர்களோ அந்த கட்டம் முதல் உங்கள் பதிவுகள் தம் பிரைவசியை இழக்கின்றன.

அதன்பின் உங்கள் முகநூல் பதிவுகள் தினத்தந்தியில் முதல் பக்கத்தில் விளம்பரம் செய்து ஒரு தகவலை தெரிவிப்பதுக்கு சமம். தினத்தந்தியில் எந்த செய்திகளை எல்லாம் போடமாட்டீர்களோ அதை எல்லாம் உங்கள் முகநூலிலும் போடக்கூடாது.

முன்பின் தெரியாதவர்கள் ரோட்டில் உங்களை நிறுத்தி “நீங்கள் ரொம்ப அழகு. போன் நம்பர் கொடுங்க” என்றால் எப்படி ரியாக்ட் செய்வீர்களோ அப்படியே தான் முகநூல் மெஸெஞ்சரில் உங்கள் “நட்பு வட்டத்தில்” இருப்பவர்கள் மெஸெஞ்சரில் சொன்னாலும் ரியாக்ட் செய்ய வேண்டும்.

எல்லாருடைய பதிவுகளும் படித்தால் “இத்தனை நல்லவர் உலகில் உண்டா” என யோசிக்கும் வண்ணம் தான் இருக்கும். கவர் பேஜாக மனைவி, குழந்தைகள் படத்தை வைத்திருப்பார்கள். மெஸெஞ்சரில் அவர்கள் காட்டும் உண்மை முகம் வேறு.

அது அவர்கள் தவறு கிடையாது. அவர்களை பொறுத்தவரை நீன்ங்கள் அவர்களின் 5000 நட்புகளில் ஒருவர். வலை வீசினால் வீசுவோம், மாட்ட்டவில்லையெனில் அன்பிரண்ட், அடுத்த பெண் என போய்க்கொண்டு இருப்பார்கள்.

நம் ஊரில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை, என்ன பிரச்சனை என வந்தாலும் காசை வீசி சரி செய்துகொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள். கோர்ட்டு, வழக்கு என வந்தால் உங்கள் பேரன், பேத்தி காலத்தில் கூட அது முடியாது.

அதனால் நாம் இருக்கும் ஒழுங்கில் நாம் இருந்துகொண்டால் பிரச்சனை இல்லை.

பேஸ்புக் மெஸெஞ்சரை போனில் இன்ச்டால் செய்யாமல் விட்டுவிடுங்கள். முக்கால்வாசி தொல்லை போய்விடும்.

உங்கள் நட்பில் இருக்கும் எந்த ஆணையும் நம்பி தனியாக போய் சந்திக்கவேண்டாம். காப்பி குடிக்கவேண்டாம்.

தனியாக மெஸெஞ்சரில் உரையாடவேண்டாம்.

வீட்டுக்கே வருகிறேன் , அம்மா, அப்பாவை பார்த்து பேசுகிறேன் என்பார்கள். நம்பவேண்டாம்.

பெற்றோருக்கு தெரியாத எந்த விசயத்தையும் செய்யவேண்டாம்.

நாம் வாழும் உலகம் பாதுகாப்பற்றது. நாம் தான் நம் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

என் பிள்ளைகளுக்கு என்ன அறிவுரை சொல்கிறேனோ அதைதான் எழுதி இருக்கிறேன்.

நன்றி.

பதிவு: neander selvan

You might also like

Leave A Reply

Your email address will not be published.