பாலியல் வன்கொடுமை நடந்தால் அவன் கூப்பிட்டு இவ ஏன் போனா..? இவ யோக்கியமா..? இந்த சமூகம் இதை தான் கேட்கிறது..!

0 990

பொதுவாக எல்லாருமே பெண் குழந்தையை பாதுகாப்பா வளர்க்கணும், பெண் பாதுகாப்பு அவசியம் பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள் கடவுளின் மறு உருவம் பெண்கள் இப்படி அப்படி பேசிய இன்னொரு பக்கத்தை பேசாம விட்டு விடும். அது இன்னொரு பக்கம் என்ன என்று கேட்கிறீர்கள அதுதான் ஆண்கள்

எங்க பாலியல் வன்கொடுமை நடந்தாலும் அவன் கூப்பிட்டு இவ ஏன் போனா என்றே 90% கேள்விகள் வருகிறது..! ஆனால் கேள்வி இப்படி இருக்க வேண்டும் நம்பி வந்த பெண்ணை ஏன் இப்படி பண்ணுனான் என்று..?

நந்தினி யாரு கூப்ட்டு போனா…?

ஆசிபா யாரு கூப்புட்டு போனா..?

ஹாசினி யாரு கூப்புட்டு போனா..?

இன்னும் எத்தனை எத்தனை பெண்கள் பட்டியல் நீளும்.‌‍..!

பதில் கூறவும் முட்டு கொடுப்பவர்களே..?

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் போது நாம் செய்யும் தவறுகள் என்னென்ன..?

*)ஒரு பொண்ணு கிட்ட ஒருத்தன் சில்மிஷம் பண்றானு தெரிஞ்சு ஒருத்தன் தடுக்கபோயிருகான்…

அப்போ அந்த பொண்ணு ஒரு மஜாவுக்காக கத்துனேன் நீ எப்படி அத கேட்கலாம் என்று அவனை திட்டியிருக்கிறாள்…

இப்படி பண்ணுனா, இவளுக மஜாவுக்காக கற்பழிக்கபடலாம்னு விட்டுட்டு போக வேண்டியதுதான்…

மெட்ராஸ்ல அண்ணா நகர் டவர் பார்க்ல லவ் பண்ற போர்வைல சில்மிஷம் பண்ணிட்டு இருக்குற ஒரு நாயவாச்சும் யாரும் கேள்வி கேட்கமுடியுமா? அதுக்கு யார்காச்சும் வக்கு இருக்கா??

நான், 2014ல முதலமைச்சர் தனி பிரிவுக்கே கடிதம் எழுதினேன். அண்ணா நகர் பார்க்ல பொரியவங்க நடைபயிற்சி போர இடத்தில சில்மிஷம் நடக்குதுனு . போலீஸ் என்ன கூப்பிட்டு இதலாம் கண்டுகாதீங்கனு சொல்லிஅனுபிட்டாங்க..

இது சமூக அலட்சியம்…(சரவணா)

*)நாகரீக மோகத்தில் மிதக்கும் பெண்களுக்கு இது போன்று எத்தனை சம்பவம் அரங்கேறினாலும் விழிப்பிணர்வு அடைவதில்லையே…(செல்வராஜ்)

*)இந்த மாதிரி நிகழ்வுகளை கண்டதும், சமுதாயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு நிரந்தரத் தீர்வு காணாமல், வழக்கம்போல் சமூக ஊடகங்களில் இரண்டு மூன்று நாட்களுக்கு பேசி விட்டு செல்வதே…நம் முதல் குற்றம்….(மோகன்)

*)’பாலியல் குற்றங்களுக்கு
சினிமா 75% காரணம் சமூகம் 25% காரணம்
‘சினிமா அனைத்து துறையும் குறைகூறும்
‘தன் துறையின் குறையை கூறியது 0.0001%
சதவீதம்
‘சமூகம் பிறர் மீது குறை கூறும் குறைக்கு தீர்வும்
‘கூறும் தன் குறை தெரிந்தும் தெரியாதது போல்
நடிக்கும்
‘சிந்தித்துப் பாருங்கள் புரியும்

_ ம.கோ.செந்தமிழ் செல்வன்

*)பெண் மேல் குற்றம் சொல்வது.குடும்ப மானம் போச்சு , மயிறு போச்சுன்னு அந்த போட்டு adippadhu, திட்டுவது, சமூகமும் அந்த பெண்ணை தவற கண்ணோட்டத்தில் பார்ப்பது…(ராதிகா)

*)Play boy பிரண்ட் ஆஹ் கூட வச்சிட்டு கண்டுக்காம போறது தான் பெரிய தப்பு….(சக்தி சரவணா)

*)Pasanga chinna vayasulaye avangala petha amma olunga valarkanum. “Endha pennayum ne aluga vaika kudathu” nu chinna vayasulaye sonna tappu panatha nala pasangala valarkalam.(கார்திகா)

*)இந்த உலகம் ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சேர்த்து தான் என்று ஒவ்வொரு ஆணும் உணரும் தருணம்.(பைசல்)…

தொடரும்…

பகிருங்கள் மாற்றத்தை நோக்கி

You might also like

Leave A Reply

Your email address will not be published.