இந்தியாவின் சிறந்த வரலாற்று பெண்கள் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள் இங்கு உள்ளது

0 295

தற்போது வரலாற்றில் புனைவுகளும் தொன்மங்களும் வரலாறு என்று இணைக்கப்படுவதால், நாம் வரலாற்றை ஒரு மாறுநிலைக் கோணத்துடனே அணுக வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் வரலாற்றில் வீரமங்கைகள் என்று போற்றப்படுவரை தவிர்த்து, தரவுகளின் அடிப்படையில், கண்கூடான மாற்றங்களின் அடிப்படையில் என் பார்வையில் வரலாறுப் படைத்த பெண்கள்:

மருத்துவர் முத்துலஷ்மி ரெட்டி:

பெண் உரிமை தன்னார்வலர், சட்டப்பேரவையில் முதல் பெண் உறுப்பினர், சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர், ஆண்டாண்டு காலமாக இருந்த தேவதாசி முறையை ஒழித்த சமூகப் போராளி – இவை அனைத்தையும் அவர் செய்தது 1920-களில்.

தேவதாசி பணி செய்து எங்கள் வீட்டு பெண்கள் களைத்து விட்டார்கள். வேண்டுமென்றால் உங்கள் வீட்டு பெண்களை அனுப்புங்கள் என்று கூறி சத்தியமூர்த்தி அவர்களின் வாயை அடைத்தவர்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

முத்துலெட்சுமி ரெட்டி அவர்களுடன் இணைந்து தேவதாசி முறை ஒழிய காரணமானவர். இந்தி திணிப்பை 30-களில் எதிர்த்தவர்களில் முக்கியமானவர்.

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்

காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு ஒடுக்கப்பட்டவர்களின் நில உரிமைக்காக அயராது உழைத்தவர். கீழ்வெண்மணி படுகொலையால் பாதிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டவர்கள் நில உரிமைக்காக போராடியவர். ‘உழுபவனின் உரிமை இயக்கம்’ தொடங்கி இதன் மூலம் 13,500 பெண்களுக்கு நிலம் வர வழி செய்தவர்.

இளைய தமிழகத்திற்கு அறிமுகம் இல்லாத வரலாற்றுப் பெண்கள் இவர்கள்.

மஹாராஷ்ட்ரத்தின் சாவித்திரி பாய் புலேவும் நினைவிற்கு வருகிறார்.

இன்று உலக மகளிர் தினம் (International Women’s Day). ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும் சர்வதேச மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர்.வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.

1857ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

இதனால் பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர், 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன் பிறகு 1907ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.

1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.

தற்போது பெண்கள் பல தடைகளையும் தாண்டி வந்து தம்மாலான பங்களிப்புகளைப் பல பெண்கள் செய்திருக்கிறார்கள். இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை நன்கறிந்து வளர்ச்சி பணியில் ஈடுபட்டு தாங்களும் வாழ்ந்து பிறரும் வாழ வழி செய்கிறார்கள்.

பட்டங்கள் ஆள்வதற்கும், சட்டங்கள் செய்வதற்கும் பெண்களுக்குள் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என பாரதியார், பெரியார், திரு.வி.க. ஆகியோர் போராடினார்கள். தற்போது பெண்கள் கல்வி அறிவு பெற்று ஆட்சித்துறை, தொழில்துறை, அறிவியல் துறை, மருத்துவத்துறை, சட்டத்துறை, காவல்துறை, இலக்கியத்துறை போன்ற துறைகளில் பணியாற்றுவதுடன் வெற்றிநடை போடுவதையும் காண்கிறோம்.

இன்றைய பெண்கள் தொழில்செய்வதில் வல்லவர்களாக திகழ்வதோடு, தொழிற்சாலைகள் தொடங்கி அதில் பலருக்கு வேலை கொடுத்து வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாங்கினை காணமுடிகிறது. கிராமப்புற மகளிர் கூட சுயஉதவிக்குழு உருவாக்கி அதன் வழியாக சேமித்த தொகையுடன் அரசிடமிருந்து கடன் உதவி பெற்று சிறுசிறு கைத்தொழில்களை செய்து மேன்மையுடன் வாழ்கின்றனர். இன்றைய பெண்கள் வீட்டு பொறுப்போடு கூட வேலை ஒன்றை தேடி அதையும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

விளையாட்டு துறையிலும் பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள். வன்மைத்தன்மையுடைய கராத்தே, ஜிம்னாஸ்டிக் போன்றவைகளில் ஈடுபட்டு நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்குமளவு முன்னேறி வருகிறார்கள். ஆண்களுக்கு இருக்கும் சகலவிதமான திறமைகளும் பெண்களுக்கும் உண்டு என்பதற்கு ஏற்ப காவல்துறையிலும் பலர் உயர்பதவிகளில் இருந்து சிறப்பான சாதனைகளை செய்து பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நூற்றாண்டில் கிராம பஞ்சாயத்துக்களில், நகர, மாநகராட்சிகளில் உறுப்பினராகி மக்களுக்கு தொண்டு செய்து வருகிறார்கள். மேலும் அரசியலில் ஈடுபட்டு பல உயர்பதவிகளை பொறுப்பேற்று அரிய சேவை செய்து வருகின்றனர். இன்று அரசியலில் பெண்களின் பங்கு அதிகமாக காணப்படுகிறது.

‘தொட்டிலை ஆட்டும் கை

தொல்லுலகை ஆளுங்கை’

என்பதை உலகுக்கு காட்டும் வழியில் பெண்கள் இன்று செயல்பட்டு வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை நன்கறிந்து வளர்ச்சி பணியில் ஈடுபட்டு தாங்களும் வாழ்ந்து பிறரும் வாழ வழி செய்கிறார்கள். முன்னேற்ற பாதையில் முனைந்து சென்று நாடு உயர, மேன்மையுற தங்களை அர்ப்பணிக்கின்றனர்.

‘கட்டமைக்க பட்டவற்றில் கட்டப்பட்டு இருந்தோம் வீறு கொண்டு எழுந்தோம் விண் உயர முயற்சி செய்தோம் அன்றே முடியவில்லை என்றானாலும்

21-ம் நூற்றாண்டில்

எதையும் சாதிக்க முடியும் வீரப் பெண்களால் என தற்போது விண்ணளவில் உயர்ந்து விட்டார்கள் .,

வாழ்த்துக்கள் வாழ்க வளர்க்க வெல்க ஆணுக்கு நிகர் பெண் இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.