கோவில் காளைய அழிக்க அவனால முடியல மலட்டு ஊசிய கையில் எடுத்து அரசாங்கத்துகிட்ட கொடுத்தான் வேர வழியே இல்லாம இந்த அரசாங்கம் ..!

0 1,648

மீத்தேன் எடுக்க அரசு பேருந்துகளில் விளம்பரங்கள் ஓஎன்ஜிசி க்கு அரசு பேருந்துகளில் விளம்பரங்கள் விவசாயி அவன் பாட்டுக்கு நல்லா வாழ்நதுட்டு இருந்தான் பசுமை புரட்சின்னு கொண்டுவந்து உரத்த தினிச்சீங்க..! பாவம் படிச்சவன் சொல்றான்னு அவனும் நம்ப ஆரமிச்சான்…! உங்க விதை இந்த உரம் போட்டா விளையாதுன்னு சொல்லி விதையும் வாங்கவச்சிங்க..!

அவனும் நிலத்துல நல்லா விளையுதுன்னு ஆடு மாடெல்லாம் விற்க ஆரம்பிச்சான் காலம் போகபோக மண்ணு மலடாச்சி காரணம் ஆட்டு மாட்டு சாணம் போட்டு பல வருசம் ஆச்சி..! சரி வித்த மாட்டெல்லாம் வாங்க மறுபடியும் சந்தைக்கு போனான் அங்க ஜெர்சி மாட்ட வியாபாரம் பண்ண வச்சாங்க அதிகம் பால் தரும் அத வச்சி நீங்க முன்னேறாலமுன்னு..!

இந்த விவசாயி அப்பையும் நாட்டு மாட்டயே வாங்கிட்டு வந்தான் இத கண்டு கோவப்பட்ட அவன் கிராம புறங்களில் காளை மாட்டுகளை அழிக்க முற்பட்டான் அனைத்தும் காளையும் அவன் நினைத்து போல சல்லிகட்டு தடையில் அழிந்தது கோவில் காளைகளை தவிர..!

கோவில் காளைய அழிக்க அவனால முடியல மலட்டு ஊசிய கையில் எடுத்து அரசாங்கத்துகிட்ட கொடுத்தான் வேர வழியே இல்லாம இந்த அரசாங்கம் இதில் கை வைக்கும் போது தூங்கிகிட்டு இருந்த நம்மாளு வேண்டும் வேண்டும் சல்லிக்கட்டு வேண்டும் என்று போராட ஆரமிச்சான்…!

நாளுக்கு நாள் கூட்டம் கூடுச்சு வாரச்சந்தை எல்லாம் விரிச்சோன்னு போக ஆரமிபிச்சிச்சி கேரளா காரன் இதை கண்டு கோவப்பட்டான் காரணம் அவனுக்கு கறி தமிழ்நாட்டுல இருந்து போறதுதானே..!

அந்த நேரத்தில் அவன் தமிழ்நாட்டு காய்கறிகள் வேண்டாம்னு சொல்ல காய் எடுக்க ஆள் இல்லாம குப்பையில கொட்டுனான் நம்ம ஆளு..! நட்டத்துக்கு மேல நட்டம் ஆனால் கூட்டத்துல ஒருத்தன் வந்து நின்னான் சல்லிக்கட்டு வேண்டுமுன்னு..!

ஒருவாரம் தமிழ்நாடே ஒழித்தது குரல் ஓட்டு பிச்சை எடுத்தவனெல்லாம் ஓட்டல்ல படுத்து தூங்க ஓட்டு போட்டவனெல்லாம் ரோட்ல நின்ன காலம் அது

இறுதியில் அவன் வெளிய சுதந்திரமா சுத்த ஜல்லிக்கட்டு அனுமதின்னு ஒரு அறிக்கை விட்டான் நம்மாலு வழக்கம் போல என் கட்சிகாரன் தான் அனுமதிகொடுத்தான் உன் கட்டசிகாரன் கொடுக்கல அப்புடின்னு சொல்லி கூட்டத்து விட்டு வெளிய வந்து அவன் அவன் பொழப்பு பாக்க போனான்..!

இப்போ என்னன்ன எலக்சன் வரப்போகுது நம்மாளு எல்லாமே மறந்து அவனுக்கே ஒட்டு போடுவான் இத சொல்ல தான் இந்த பதிவே..!

உங்கள மாதிரி நிறையபேரு மறந்து இருப்பாங்க இதை பகிர்ந்து ஞாபக படுத்துங்க

சிந்தித்து வாக்களிப்பீர் எதிர்கால நலன் கருதி

You might also like

Leave A Reply

Your email address will not be published.