சாம்புராணிபட்டி காளையின் வர்க்கம் குறைய காரணமாக இருக்கும் வனத்துறையினர்.

0 293

ஜல்லிக்கட்டு வரலாற்றில் சிறப்பு அந்தஸ்த்து பெற்ற காளை சாம்புராணிபட்டி காளைகள். ஜல்லிக்கட்டில் நின்று விளையாடி பெயர் பெற்ற காளைகள். சாம்புராணிபட்டி காளையின் வர்க்கம் தற்ப்போது குறைந்து கொண்டே வருகின்றது.

சாம்புராணிபட்டி மலைப்பகுதியில் வனத்துறை ஆடு, மாடு மேய்ப்பதை தடை செய்ததினால் மாட்டு இனங்கள் தற்ப்போது குறைந்துவிட்டது. கோவில் காளைகள் பெரும் பாலும் ஒரு பங்காளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவற்றை உழவு பழக்கி பயன்பாட்டிற்க்கு கொண்டு வருவார்கள். அதில் சிறந்த விளையாட்டு காளைகள் ஜல்லிக்கட்டில் பயன்படுத்தினார்கள் மீதம் உள்ள காளைகளை சிலவற்றை உழவுக்கும், மற்ற மாடுகளை மலையில் ஏற்றி விடுவார்கள். தற்ப்போது வனத்துறை ஆடு மாடு மேய்ப்பதை தடை செய்ததினால் பல மாடுகள் சந்தையில் விக்கப்பட்டது. தற்ப்போது குறைந்த அளவே மாடுகள் காணப்படுகின்றது.

ஜல்லிக்கட்டில் சிறப்பான பெயர் பெற்ற சாம்புராணிபட்டி காளை வாடி வாசலில் வருகிறது என்றால் வீரர்கள் யாரும் களத்தில் நின்று காளையை தழுவ நினைக்க மாட்டார்கள். அதே போல் ஜல்லிக்கட்டு களத்தை விட்டு தானா சென்ற சரித்திரமே கிடையாது. தற்ப்போது உள்ள காளைக்கு மட்டும் இல்லை இதன் வர்க்க காளைகளுக்கே இதே சிறப்பு தான். கருப்பனின் அருளால் இதன் வர்க்க காளைகளுக்கே நின்று விளையாடும் சிறப்பு பெற்றியிருக்கின்றது.

இந்த வருடம் 2019 ல் வயது முதிர்ச்சியின் காரணமாக ஜல்லிக்கட்டில் பங்கு பெறவில்லை என்பது பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. அதன் வர்க்கத்தில் சாம்புராணிபட்டி காளையின் மகன் தற்ப்போது ஜல்லிக்கட்டிற்க்கு தயாராகி வருகிறான். அடுத்த வருடம் களம் களத்தில் பார்க்கலாம்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.