இனி மலை காடுகளே இருக்காது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? நம்பிதான் ஆகவேண்டும்

0 181

வெளியேற்றப்படும் 11 லட்சம் பழங்குடி மக்கள்: இனி காடுகளைப் பாதுகாப்பது யார்

பழங்குடிகளில் தமிழகத்திலிருந்து 11,742 பேர் வெளியேற்றப்படவுள்ளனர்.
இதில் அதிகப்பட்சமாக இந்தியாவின் அடர் வனப்பகுதிகளை கொண்ட மாநிலங்களான, சத்தீஸ்கரில் 4,62,403 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 3,62,024 பேரும், மகராஷ்டிராவில் 2,28,221 பேரும், தென்னிந்தியாவில் அதிகப்பட்சமாக கர்நாடக மாநிலத்திலிருந்து 1,80, 956 பேரும் வெளியேற்றப்படவுள்ளனர்.

இந்தியாவில் மலைப் பகுதியில் வாழும் பழங்குடிகள், ஆதிவாசிகள் என அனைவரும் காலம்காலமாக காடுகளில் வாழ்கிறார்கள். இதில் பழங்குடிகளின் வரலாறு என்பது சுமார் 3,000 – 4,000 பழமை வாய்ந்தது.
காடுகளை பாதுகாப்பது, காடுகளுடன் இணைந்து வாழ்வதும்தான் மலைவாழ் மக்களோட முக்கியமான வேலை. காடு இல்லை என்றால் அவர்கள் இல்லை, அவர்கள் இல்லை என்றால் காடுகள் இல்லை. என்னைப் பொறுத்தவரை வனத்துறையே இங்கு தவறுதான்.

மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு ஆங்கிலேயர்கள் உருவாக்கியதுதான் இந்தியா வனத்துறை…!

You might also like

Leave A Reply

Your email address will not be published.