பாரம்பரியம் காக்கும் அரளிப்பாறை மஞ்சுவிரட்டு – வீடியோ இணைப்புடன்

0 498

தமிழர்களின் வீரவிளையாட்டுக்கள் தமிழர் பண்டிகை நாட்களிலும், கோவில் திருவிழா நாட்களிலும் பண்டிகைளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதில் தமிழ் மக்கள் அதிகம் விரும்புவது ஜல்லிக்கட்டு போட்டிகள், சேவல் சண்டை, கிடாமுட்டு, மாட்டுவண்டி பந்தையம் போன்ற விளையாட்டுக்களை வீரவிளையாட்டுக்களாக கொண்டாடி வருகிறார்கள். ஜல்லிக்கட்டிற்க்கு பல பெயர்கள் உண்டு வாடி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது கட்டு, வட மஞ்சுவிரட்டு என்று ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஏற்றவாறு ஜல்லிக்கட்டை வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டம் அரளிப்பாறை மஞ்சுவிரட்டு அலங்காநல்லூருக்கு நிகராக பெயர் பெற்ற ஊர். இங்கு நடக்கும் மஞ்சுவிரட்டில் பரிசு பொருள்களுக்கு இடமில்லை. காளையா? வீரானா? என்ற சவால் மட்டுமே!.

அரளிப்பாறை மஞ்சுவிரட்டு வீடியோ

அரளிப்பாறை அங்கு கோவிலை சுற்றி 5 மைலுக்கு மஞ்சுவிரட்டு நடைபெறும். அதில் வெளியேறும் காளைகளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். கழுத்தில் வேட்டி, கொம்பில் துண்டு, கால் சலங்கையுடன் ஓடிவரும் காளைகளை வீரர்கள் விரட்டு காளையை தழுவி வேட்டி துண்டுகளை அவிர்க்க வேண்டும். அவிர்த்த வேட்டி துண்டுகளை வீரரின் வெற்றி பரிசாக வீட்டிற்க்கு கொண்டு செல்கிறார்கள்.

கழுத்தில் கழுத்து மணியுடன் விளையாடும் காளைகளை பிடித்த வீரர்கள் தனது ஊர் மந்தை கோவில்களில் அந்த மணியை மாட்டிவிடுவார்கள். காளைகளின் உரிமையாளர்கள் மணியின் அடையாளம் சொல்லிவிட்டு வெறும் 11ரூ காணிக்கையை கோவில் உண்டியலில் போட்டு விட்டு அந்த கழுத்து மணியை எடுத்துச் செல்லுவது இன்றும் வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் கலந்து கொள்ளும் காளைகள் சிவகங்கை, புதுக்கோட்டை, காளைகளை அதிகம் இடம் பெறும். இங்கு நடக்கும் மஞ்சுவிரட்டில் அனுமதி சீட்டு தேவையில்லை, காளைகள் வரிசையாக நிக்க தேவையில்லை என்பதால் அதிகமா காளைகள் அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் கலந்து கொள்கின்றது.

அவிர்த்து விடும் காளைகள் வேறு திசையில் ஓடாமல் வந்த பாதையிலே சென்று வீடு திரும்புகின்றது. வீட்டின் வாசலில் அரிசியுடன் இனிப்புகளும் வைக்கப்பட்டு காளைகள் வரவேற்க்கப்படுகின்றது. காளைகளுக்கு பொங்கல் வைத்து வெற்றியை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

பரிசுக்கு ஆசைப்படாத இவர்கள் மரியாதையும், பாரம்பரியமும் பெரிதும் பாதுகாக்கப்படுகின்றதாக காளை கொண்டு வரும் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.