செம்மரங்கள்… வெட்டுவதற்கல்ல, வளர்ப்பதற்கு!

0 239

சமீப காலமாக செம்மரம் என்ற வார்த்தையை அடிக்கடி செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம். செம்மரங்கள் பற்றியும் செம்மரங்கள் வளர்ப்பதால் கிடைக்கும் இலாபம் பற்றியும் விளக்கும் விதமாக இங்கே சில தகவல்கள்!
சந்தன மரம் கடத்தல் என்று ஒருகாலத்தில் பேச்சு அடிபட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இன்றோ செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக செய்திகள் வருகின்றன. சந்தனத்தையும் மிஞ்சிய செம்மரங்களில் அப்படியென்ன சிறப்பு?! செஞ்சந்தனம் எனப்படும் செம்மரங்களை வளர்ப்பது குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம்! செம்மரங்களில் அப்படியென்ன சிறப்பு?! சந்தையில் செம்மரத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதனால் அதன் மீது அனைவரின் கவனமும் குவிந்துள்ளது. சந்தன மரத்திற்கும் செம்மரத்திற்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், அதன் எடையும், நறுமணமும் தான்! அதிக பணமதிப்புள்ள மரமாக இருந்த சந்தன மரத்தை கடந்த சில ஆண்டுகளில் செம்மரம் சந்தையில் முந்திவிட்டது. அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரமாக செஞ்சந்தன மரம் உள்ளது. பல அணு உலைக்கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இதைத்தான் பயன்படுத்துகிறார்களாம்.

அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரமாக செஞ்சந்தன மரம் உள்ளது. பல அணு உலைக்கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இதைத்தான் பயன்படுத்துகிறார்களாம். ஜப்பான் நாட்டில் எக்ஸ்ரே, லேசர் போன்ற வீரிய கதிர்வீச்சு சிகிச்சைகளில் மருத்துவர்கள் கதிர்வீச்சைத் தடுப்பதற்காக, செஞ்சந்தன மரத்துண்டை தங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒலி அலைகளைத் தடுக்கும் திறன் கொண்ட இம்மரங்கள், வெப்பத்தையும் அதிக அளவில் கடத்துவதில்லை! செம்மரத்தை கரையான் அரிக்காது. இவ்வளவு சிறப்புகள் இம்மரங்களுக்கு இருப்பதால், இவற்றின் சந்தை வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் குறிப்பிடத்தகுந்த இடம் செஞ்சந்தனத்திற்கு உண்டு! செஞ்சந்தனத்திலிருந்து பெறப்படும் நறுமணம் மிக்க எண்ணெய், மருந்துக்காக மட்டுமன்றி அத்தர் வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சந்தனம் மேற்குத் தொடர்ச்சியில் அதிகம் காணப்படும்.

செம்மரம் கிழக்கு மலைக் குன்றுகள் பகுதிகளில் அதிகம் காணப்படும். குறிப்பாக தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஆந்திராவில் கர்நூல், கடப்பா, குண்டூர், கோதாவரி, சித்தூர் மாவட்டங்களிலும் செம்மரங்கள் அதிகம் உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.