இந்த செட்டி நாடு உணவுன்னு பேசுறாங்களே அது என்னன்னு தெரிஞ்சுக்கோங்க மக்கா..!

0 560

செட்டிநாடு என்பது தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளைக் குறிக்கும். இங்கு இங்கு உள்ள மக்கள் விதவிதமான உணவுவகைகளை சுவைத்து மகிழ்கின்றனர்.

காலை உணவுகள்

இங்கு காலை உணவாக இடியப்பம் பணியாரம், வெள்ளைப்பணியாரம், வடை, கந்தரப்பம், உக்காரை, மசாலாசீயம், கவுணி அரிசி, வேங்கரிசி பொங்கல், மிளகுப் பொங்கல், ரவை இட்லி, கம்பு இட்லி போன்றவற்றை சுவைத்து மகிழ்கின்றனர்.

நண்பகல் உணவு

நண்பகலில் புழுங்கல் அரிசி சாதம், துவரம் பருப்பு முருங்கைக்காய் சாம்பார், வத்தல் குழம்பு, மோர்க்குழம்பு, பருப்புநெய், கீரை பொறியல், காய்கறி கூட்டுகள், மாங்காய் வெல்லம் போட்ட இனிப்பு மண்டி, வெண்டைக்காய், மொச்சைப்பயிறு சேர்த்து செய்த புளிப்பு மண்டி, மோர், வடகம், அப்பளம், பாயாசம், போன்றவற்றை சுவைக்கின்றனர்.

மாலை உணவுகள்

மகிழம்பூ புட்டு, காரக்கொழுக்கட்டை, இனிப்புக் கொழுக்கட்டை, அரிசிப்புட்டு, கேப்பை புட்டு, அடை தோசை, கம்பு தோசை, போன்றவற்றை சுவைக்கின்றனர். இவை தவிர தேன் நெல்லிக்காய், கற்றாழைச் சாறு, பானகம், இளநீர் போன்றவற்றையும் விரும்பி உண்கின்றனர்.

செட்டிநாடு சமையல் என்பது தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் செட்டிநாடு என்ற பகுதியில் வழக்கத்தில் உள்ள சமையல் மரபு. இப்பகுதியில் அதிகம் வாழும் செட்டியார் இனத்தவர்கள் வாய்ப்புப் பெற்ற வணிக இனத்தவர்கள் ஆவர் . செட்டிநாட்டு சமையல் வாசனைச் சரக்குகளும் நறுமணப் பண்புகளும் நிறைந்த ஒரு இந்திய சமையல் வகை ஆகும்.

செட்டிநாட்டு சமையலில், இறைச்சி உணவு சமைக்கும் போது பயன்படுத்தப்படும் பல்வகை வாசனைச் சரக்குகள் பிரபலமானவை. வழமையான உணவுக்கு சுவை கூட்டுவது, அவ்வப்போது அரைத்துச் சேர்க்கும் காரமும் நெடியும் நிறைந்த மசாலாக்கள் மற்றும் மேல் அலங்காரமாக வைக்கப்படும் அவித்த முட்டை போன்றனவாகும். இந்த வறண்ட வெப்ப சூழலில், உப்புக்கண்டம், காய்கறி வற்றல் போன்றவற்றையும் பயன்படுத்துகிறார்கள்.

அசைவ உணவு என்பது மீன், இறால் மற்றும் நண்டு வகைகள், கோழி மற்றும் வெள்ளாட்டு இறைச்சி என்பது மட்டுமே. செட்டியார்கள் பன்றி மற்றும் மாட்டு இறைச்சியினை உண்பதில்லை.

பெரும்பாலான உணவு வகைகள் அரிசிச் சாதம் மற்றும் அரிசி கலந்து செய்த தோசை, ஆப்பம், இடியாப்பம், அடை மற்றும் இட்லி போன்றவற்றுடன் உண்ணப்படுகின்றன. பர்மா போன்ற நாட்டினரின் வணிகத் தொடர்பால் கார் அரிசியை வேக வைத்து புட்டு செய்கிறார்கள்.

செட்டிநாடு சமையல் பல்வகை சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை அளிக்கின்றன.

பயன்படுத்தப்படும் வாசனைச் சரக்குகள்தொகு

செட்டிநாட்டு சமையலில் பயன்படும் வாசனைச் சரக்குகள்:

மராத்தி மொக்கு (உலர்ந்த மலர் நெற்று),

அனாசிப்பூ (star anise)

கல்பாசி (a lichen)

புளி

காய்ந்த மிளகாய் வற்றல்

சீரகம்

லவங்கப் பட்டை

ஏலக்காய்

பிரிஞ்சி இலை,

மிளகு

பெருங்காயம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.