பழங்கால வீடுகளின் தரையில் சிவப்பு நிற வண்ணங்கள் எப்படி வந்தது தெரியுமா..?

0 2,620

பழங்கால வீடுகளில் நாம் சிவப்பு நிறத்தில் தரைகளை பார்த்தது உண்டு. அதன் நிறம், அதன் பளபளப்பு பார்ப்பதற்கு நம் கண்ணை கவரும் விதமாக இருக்கும். ஆனால் தற்போது அதனை நாம் மறந்தது ஏன்?

பெரிய பெரிய வீடுகளில் கிரானைட், மார்பில்ஸ், டைல்ஸ், தரைகளை கண்டு வியந்து வருகின்றனர், இப்போதுள்ள தலைமுறைகள். வீட்டுக்கு வருபவர்களை ஈர்க்கும் விதமாக கலர் கலரான அழகான தரை தளங்கள் மாறிவிட்டன.

ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னோடியான ரெட் ஆக்ஸைடு தரை நினைவில் உண்டா என்று கேட்டால், பலரிடம் இல்லை என்ற பதில்தான் வருகிறது.

பழமையான வீடுகளில் இன்னும் இத்தரைகளின் நிறம், அதனுடைய சிறப்பு மாறாமல் இருக்கிறது.

சிவப்பு நிற ஆக்ஸைடு தரை முன்னதாக எந்த ஒரு கலவையும், கெமிக்கலும் சேர்க்காமல் இருக்கும். அதனால் அதனுடைய சிறப்பு அப்படியே இருந்தது.

ஆனால் இப்போது தரை பூச்சு பூசிய ஒரு மாதத்தில் நிறம் மங்கத் தொடங்குகிறது. காரணம் அதில் சேர்க்கும் கெமிக்கல் கலவை.

இத்தரைப் பூச்சை ஏகச்சிறந்த ஒருவரால் மட்டுமே விரிசல் விழுகாமல் நேர்த்தியாக போட முடியும். வீடுகளில் வெப்ப சலனம் இல்லாமல் குளிர்ச்சிக்காகவே, முன் காலங்களில் இவை பூசப்பட்டது.

வெப்பம் நிறைந்த சூழல் இருந்தால் வீட்டில் வசிப்பவர்களுக்கு அதனால் நோய் பாதிப்பு வரக்கூடும். அதற்காகவே இத்தரைப் பூச்சை பலரும் உபயோகப்படுத்தினர்.

இப்போது உள்ள ரெட் ஆக்ஸைடு கலவையை குறை கூறுவதில் எந்த ஒரு நியாயமும் இல்லை. இப்போது உள்ள சிமெண்ட்களும் முன் போல் இல்லை.

சிமெண்ட் கலவை சீக்கிரமே இறுகிவிடுகிறது அதனால் எளிதில் விரிசல் விழுவதற்கு அதிக வாய்ப்புண்டு. விரிசல் விழுந்தால் மீண்டும் இரு மடங்காக வேலை அதிகரிக்கும். அதன் காரணத்தாலே பலரும் ரெட் ஆக்ஸைடு முறையை கைவிட்டனர்.

ரெட் ஆக்ஸைடு முக்கியமாக சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளிலும், ஈரமான பகுதிகளிலும் போடக்கூடாது. ஏனென்றால் சுண்ணாம்பும், மெக்னீசியமும் சூரிய ஒளியை தாங்க கூடியதல்ல.

தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இந்த முறை பூச்சு, தற்போது மறைந்துவிட்டது.

இதனுடைய விலை கிரானைட் கற்களில் மூன்றில் ஒரு பங்கு தான் ஆகும். தொழிலாளர் கூலி தான் அதிகம் வரும். பவளக்கற்களை பார்க்காதவர்கள் இதனை பார்த்தால் போதும் என்ற அளவுக்கு, இதன் பளபளப்பு 96 கேரட் கோல்டு போல் மிண்ணும்.

வீட்டை அழகு படுத்த நினைப்பவர்கள், சரியான ரெட் ஆக்ஸைடு வாங்கி பூசினால், குனிந்த தலை நிமிர மாட்டார்கள் வீட்டிற்கு வருபவர்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.