Female : Kannan mani vannan
Avan arumai solla povom
Mannan mazhai vannan
Avan magimai eliya dhaamo
Aayan alankaaran
Kadal paayil thuyil aano
Maayan malar thooyan
En isaikkae isai aano
Female : Kannan mani vannan
Avan arumai solla povom
Chorus : Paarkadalil avan irukka
Paambanaiyaai naan iruppen
Female & Chorus :
Dwarakkaiyil avan vasikka
Thulasivanam aagiruppen
Female : Geethai inai avan vidhaikka
Padhaiyilae vizhundhiruppen
Female : Yamunai nadhi theerathilae
Radhaiyena kaathiruppen
Female : Vennai thirudum
Pooviral ennai thazhuva
Aasaiyil kannam nelira
Maanavan innal puriya
Nadandhadhu kanava nenava
Mayakkathil kidandha naan
Innum enna solla aaaa….aaa…aa…aa…
Female & Chorus : Kannan mani vannan
Avan arumai solla povom
Mannan mazhai vannan
Avan magimai eliya dhaamo
பெண் : கண்ணன் மணிவண்ணன்
அவன் அருமை சொல்ல போவோம்
மன்னன் மழை வண்ணன்
அவன் மகிமை எளியதாமோ
ஆயம் அலங்காரன்
கடல் பாயில் துயில் ஆனோ
மாயன் மலர் தூயன்
என் இசைக்கே இசை ஆனோ
பெண் : கண்ணன் மணி வண்ணன்
அவன் அருமை சொல்ல போவோம்
குழு : பாற்கடலில் அவன் இருக்க
பாம்பணையாய் நான் இருப்பேன்
பெண் மற்றும் குழு :
துவாரகையில் அவன் வாசிக்க
துளசிவனம் ஆகிருப்பேன்
பெண் : கீதை இணை அவன் விதைக்க
பாதையிலே விழுந்திருப்பேன்
பெண் : யமுனை நதி தீரத்திலே
ராதையென காத்திருப்பேன்
பெண் : வெண்ணை திருடும்
பூவிரல் என்னை தழுவ
ஆசையில் கன்னம் நெளிர
மாணவன் இன்னல் புரிய
நடந்தது கனவா நினைவா
மயக்கத்தில் கிடந்த நான்
இன்னும் என்ன சொல்ல ஆஅ…..ஆஅ….ஆ….ஆ…
பெண் மற்றும் குழு : கண்ணன் மணிவண்ணன்
அவன் அருமை சொல்ல போவோம்
மன்னன் மழை வண்ணன்
அவன் மகிமை எளியதாமோ