கட்டை பாவாடையோடு வந்த பணக்காரியிடம் கை நீட்டுகையில்… காலில் சேலை தடுக்கி..!

0 533

பெண் குழந்தைகளை கள்ளி பால் பருக்கி கொண்றிர்கள்.
தப்பி பிழைத்து குமரி ஆனதுகளை கற்பழித்து கொல்கிறிர்கள்.

நகரத்து பாட்டிகளே உங்கள் பழைய சேலைகளை தாருங்கள் – கிராமத்திலே
குமரிகள் இருக்கிறார்கள்.

நெல்லின் ஆடையை களைந்தால் அரிசி – அந்த அவமானம்
தாங்க முடியாமல் அரிசி செத்து போனால் சோறு.

நம்பிக்கையை விட ஒரு நண்பன் இல்லை – அவனும்
நம்மைக் கை விட்டால்…கண்ணீரை விட ஒரு கடவுள் இல்லை.

மரணத்தின் பின் நரகம் கிடைப்பது உண்மைதான்.
எங்கோ செத்துதான் நாம் இங்கு வந்திருக்கிறோம்.

கட்டை பாவாடையோடு வந்த பணக்காரியிடம் கை நீட்டுகையில்…
காலில் சேலை தடக்கி விழுந்தாள் பிச்சைக்காரி.

எலித் தொல்லை ஓய்ந்து விட்டதென்று…
வளர்த்த பூனையை கொல்லாதீர்கள்.

குழப்பம் வரும் போது சகுனியாயிருந்தவர்கள்.
கொண்டாட்டம் வரும் போது சீதையாகிறார்கள்.

உன் தோட்டத்தில் தேசிக்காய் களவு போனதற்காய்
என் வீட்டு ஊறுகாயில் சந்தேகப்படாதே…

தேனுக்கு விளம்பரம் செய்திட்டு வேப்பெண்ணையை விற்றால்…
தொண்டை அரிப்புக்கு காதுகுத்து மருந்துதான் வாங்கலாம்.

குழந்தைகள் போல மண் அள்ளி தின்பதற்கும்
நம்மிடம் தானே சொந்த நிலங்கள் இல்லை…

தொகுப்பு: நெடுந்தீவு முகிலன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.