பெண்கள் உடையில் தவறில்லை ஆண்களின் வக்கிர பார்வையில் தான் தவறு உள்ளது என்பதை ஏற்கிறீர்களா..?

0 2,111

நமது முன்னோர் மேலாடையை ஆண்பெண் வேற்றுமையின்று உடுத்தவில்லை. மேலே காணும் போட்டோவைப்போல் பற்பல போட்டோக்கள் கடந்த நூற்றாண்டிலிருந்து கிடைக்கும். முதன்முதலில் பெண்டிர் மேலாடை அணிந்தது இசுலாம் மதம் வந்ததிலிருந்து தான், பின்னர் வெள்ளையர் ஆட்சியில் படிப்படியே பரவலானது.

இப்பழக்கம் நமது தற்பவெப்ப நிலையினை குறிக்கும். குளிர் நாடுகளில் three piece suitஅணிந்தால் அர்த்தம் உள்ளது, பாலைவனத்தில் வெப்பத்திற்க்கெதிர்த்து ஆடையணியாவிட்டால் பட்டுபட்டென உயிர் நீங்கும் (குறிப்பாக, பாலைவனத்தின் உச்சவெய்யிலிற்க்கு தலையுறை அணியாவிடில் பரலோக பிரவேஸம் உறுதி). இந்தியாவில் மட்டும் அல்ல, நம் வெப்பமண்டலத்தில் (lattitude) உள்ள அனைத்து நாடுகள் வரலாற்றில் மேலாடை அணியவில்லை (தாய்லாந்து, மலேசிய, தென் அமேரிக்கா இதில் சேர்க்கலாம்). ஏனெனில் அது தேவையில்லை—குளிர் காற்று, போதிய வெப்பம் இருக்க தேவையோ?

இராசராசரின் மனையாள் செம்பியன் மாதேவியார். 12ம் நூ.ஆ., தமிழகம்

இங்கு சாதிக்கும் ஒரு பங்குண்டு. சவர்னன் (அதாவது த்ரைவர்ணிக்கன்) அங்கவஸ்த்ரம் என்ற துண்டை மேலாடையாக அணியவேணும்; அதைவைத்தே அவன் சாதியை கண்டறியலாம். ஒருவன் தன்னைவிட மேல்சாதியினனை கண்டபோது தனது துண்டை அவிழ்த்து இடுப்பில் கட்டவேணும். இது பண்ணவனைக் கண்ட உழவனில் தொடங்கி தெய்வத்தை கண்ட அர்ச்சகன் வரை பொருந்தும் (ஆகத்தான் சில கோயிற்களில் நுழைவதிற்க்கு மேலாடை அணியக் கூடாது என்பர்). அப்படி ஒரு முகமன் இருந்தது. ஆனால் இது வர்ணமற்ற பெண்ணிற்க்கு பொருந்தாது, அவளுக்கு மேலாடை அணியும் உரிமை கிடையாது, பூனூலும் கிடையாது. இந்த தகவல் இன்று நமக்கு வேடிக்கையாக இருக்கலாம்.

20ம் நூ.ஆ. புகைப்படம், கேரளம். விதைத்துவருவதால் பழங்குடியினராகமாட்டார்.

இந்த பழக்கவழக்கத்தில் கொடிய சமூகக்கட்டுமானங்கள் இருப்பினும் ஆபாசம் என்பது இல்லவே இல்லை. முலையவிழந்த பெண்ணைக் கண்டு கொந்தளித்தால் நமது தந்தை முந்தை பாட்டன்மார் அனைவரும் வன்மத்தோடு மட்டும் பெண்ணை நாடியிருக்கவேண்டும் எனப்படும்.

எந்த ஆடை ஆபாசமானது என்பதை காலத்திற்க்கேற்ப மாற்றிக்கொண்டே இருந்தது இச்சமுதாயம். இரவிக்கையும் சட்டையும் செந்தமிழ்ச் சொற்களா? முதலில் இசுலாமியர் ஆட்சியில் மேலாடை அணிந்தபோது அவரை பண்பற்ற மிளேச்சியர் என்றோம்; அன்று ஆடையணிய முயன்ற பெண்ணை வேசியாள் என்றோம், பின் வெள்ளையர் ஆட்சியில் தாழ்சாதி பெண்டிர்க்கு மேலாடை அணிய உரிமையில்லை ஆனால் வெள்ளையருக்கு ஜால்ரா தட்டும் உத்தமசாதியினர் அணியலாம் என்றோம் அதுவும் அவன் வேலைப்போட்டு கொடுக்கமாட்டானே என்று. இந்த இலக்கணத்தில் மேலாடையணிய தோள்சீலை போராட்டம் எனப் போராடிவேரு உரிமையைக் கைபற்றவேண்டியிருந்தது. கேரளத்து ஆளப்புழையில் நாங்கேலியெனும் பெண் தனது தோள்சீலைக்கு முலைவரி செலுத்த இயலாது மார்பருத்து இறந்தது நமது சமூகத்தின் அற்பசிந்தையை மெ காட்டுகிறது. படிப்படியே இன்று நேரெதிராக எதை வெளிக்காட்டிணும் பெண் ஆபாசமானவள் என்ற நிலையில் உள்ளோம்.

அஜந்தை ஓவியங்கள், 5ம் நூ.ஆ., மாராட்டிரம்.

இது முறையாகாது.

ஆக, வரலாற்றில் இன்றைவிட குறைவானதை அணிந்துவந்த நம் முன்னோர் ஆபாசம் இல்லையெனில், வேரு எங்கேயோ ஆபாசம் இருக்கவேண்டும். குறிப்பாக இன்று அனைவரும் அனைத்து உடைகளையும் அணியும் காலம். ஆபாசம் வெறும் மனதில் உள்ளது. அதை மாற்றாமல் எதுவும் யாதும் ஆபாசமாக தென்படும்.

சிறுவயதிலேயே இந்த அப்பழுக்கை ஆண்மக்கள் மனதிலிருந்து விலக்கி ஒப்புதலின்றி பிறரை தீண்டுவதோ சாடுவதோ அட்டூழியம் என்று உணர்த்தவேண்டியக் கடமை பெற்றோர் ஆசான்மாருக்கு உண்டு. தான் உணர்ந்தத்தனையும் செய்வேன் என்றோ, அதன் காரணம் பிறரின் ஆடையே என்றோ முழக்கமிடுவர் வளரும் பண்பாட்டின் கூர்முணையொடு சட்டத்தின் நெடுங்கரத்தால் வீழ்த்தப்படுவர்

பதிவு: எரிக்கு கிருபாசுதன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.