நாட்டு நாய் ஏன் இவ்வளவு விலைக்கு விற்கிறார்கள் என்று பலரும் என்னிடம் கேட்டதுண்டு..!

1 3,430

என்னிடமும் நாட்டு நாய்கள் அதிக அளவில் இருப்பதால் அதற்கான காரணத்தை விளக்க கடமை பட்டுள்ளேன்..!

பெரும்பாலும் நாட்டு நாய் என்பது தெருவில் சுற்றும் நாய்கள் என்று பலரும் நினைப்பது உண்டு ஆனால் அவை முற்றிலும் தவறு..! தெருவில் சுற்றுவது எந்த நாயோடு எந்த நாய் இனப்பெருக்கம் செய்யும் என்பதை கணிக்க முடியாது அத்தோடு தெருவில் சுற்றும் 99% கலப்பின நாய்கள் தான் பொதுவாக குரைக்கும் திறன் கொண்டவை விசுவாசம் கலந்தவை அவ்வளவு தான் தனிப்பட்ட சிறப்புகள் எதுவும் கிடையாது..

நாய்களை ஒரே காரணத்திற்காக மட்டுமே வளர்க்க முடியும் ஒன்று பாசம் இன்னொன்று பாதுகாப்பு இவை தவிர நாய்களுக்கு வேறு எந்த மதிப்பும் கிடையாது அதனால் தான் என்னவோ மனிதர்களை விட்டு வெகுதூரம் சென்று விட்டது இந்த நன்றி கலந்த நாய் இனங்கள்

kanni, chippiparai,rajapalayam அதிக விலைக்கு விற்கப்படுவதாக சமூகத்தில் ஒரு கருத்து நிலவுகிறது. நாய்களை ஏதோ இன்று வாங்கி நாளை தூக்கி வீசுவதில்லை கிட்டத்தட்ட பதினைந்து பதினாறு வருடங்கள் உங்களோடு இருக்க போவது தான் அதற்கு நீங்கள் செலவு செய்து ₹6000 ,7000 பெரிய தொகை ஒன்றும் கிடையாது, ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்றைக்கு 3500 விற்றுக்கொண்டிருக்கிறது அதற்கு ஒப்பிடும்போது இது இந்த நாய் எண்ணங்களுக்கு மதிப்பு கிடைப்பது கிடையாது

சரி என்ன காரணத்திற்காக இந்த நாய் இனங்கள் இவ்வளவு விலை வைத்து விற்கப்படுகிறது என்று பலரும் கேட்பதுண்டு நாய் வளர்க்க ஆசைப்படுபவர்களுக்கு நாங்கள் சொல்லி புரிய வைத்துவிட முடியும் வேடிக்கை பார்த்து விட்டு விமர்சனம் மட்டுமே வைப்பவர்களுக்கு என்றுமே நாங்கள் சொல்வது புரியாது.

வளர்ப்புப் பிராணியான அனைத்து வகையான உயிர்களிடத்திலும் இந்த சமூகம் பெரிதும் தேடுவது பெண் இனத்தையே ஆனால் இந்த நாய் என்று வரும் பொழுது மட்டும் பெண் இனத்தை அறவே ஒதுக்கும் காரணம் என்னவென்றால் பெண் குட்டி போடும் குட்டி போட்ட பராமரிப்பு அதிகம் ஆண் நாய்கள் எல்லாம் நம் வீட்டை நோட்டமிடும் நிம்மதி போய்விடும் என்று பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆடு மாடு கோழி வாத்து போன்ற பல வகையான உயிரினங்கள் மனிதர்களின் மாமிச தேவையை பூர்த்தி செய்கிறது அதனால் தான் இன்னமும் அந்த உயிரினங்கள் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது குறைந்த விலையில் ஆனால் நாய் அப்படி இல்லை முழுக்க முழுக்க பாதுகாப்பு மற்றும் பாசத்திற்காக மட்டுமே வளர்க்க கூடிய ஒரே பிராணி

ஒருவேளை எதிர்காலத்தில் நாய்களையும் மாமிசமாக உண்ண ஆரம்பித்தாள் நகரத்தில்கூட நாய் பண்ணைகள் கூடிவிடும். நாட்டு நாய்கள் என்பது பொதுவாக பலவித குணங்களை ஒத்து ஒரே உருவத்தில் வளர்பவை

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் அதேபோன்று நாய்களுக்கும் உண்டு பெண்கள் நாப்கின் வைத்து பயன்படுத்தி விட்டு ஏதோ ஒரு குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்கள் ஆனால் நாய்களுக்கு அப்படி இல்லை நடக்கும் இடமெல்லாம் ரத்தம் சிந்தும் அக்கறையோடு பார்க்கும் எவனோ ஒருவன் தான் அதை கழுவி விட்டு பாதுகாப்பாக வீட்டில் வைத்துக் கொண்டிருக்கிறான்அவர்களிடத்தில் போய் நீங்கள் அதிக விலை வைத்து இருக்கிறீர்கள் என்று பேரம் பேசுவது வேடிக்கையான ஒன்று தான் நீங்கள் வாங்கவில்லை என்றாலும் அந்த நாய் அங்கு சிறப்பாக தான் வாழும் உங்கள் இடத்தை விட..! என்பதை மறந்து விடாதீர்கள்

என்னிடம் கன்னி சிப்பி பாறை ராஜபாளையம் என நாட்டு நாய்கள் 8 உள்ளது இதை பராமரிக்க எனக்கு ஆகும் செலவு ஒரு நாளைக்கு 400 ரூபாய் ,400 ரூபாய்க்கு அப்படி என்னதாண்டா வாங்கி போடுறீங்க அப்ப நீங்க நினைக்கலாம் .

நாய்களுக்கு மாமிசம் போடுவது கிடையாது காரணம் கிராமப்புறத்தில் வளர்வதால் முழுக்க முழுக்க புரோட்டின் நிறைந்த நிலக்கடலை, கொண்டைக்கடலை வறுத்து அரைத்து அதை தான் காலை உணவாக கொடுக்கிறேன்

நாய்களுக்கு இவ்வளவு செலவு பண்ணுறியே அப்புடின்னு நீங்க யோசிப்பீங்க செலவு பண்றது நான் அதனால அதை பத்தி நீங்க கவலை படாதீங்க..!

உனக்கு என்ன காசு இருக்கு அதான் நாயைக் கட்டிப் போட்டு வளக்குற அப்புடினன்னு நிறைய பேர் நினைக்கலாம் .காசு இருந்தால் மட்டுமே நாய வளத்துர முடியாது பாசத்துக்கு எப்பவுமே கூட இரண்டு பேராவது இருக்கணும் இல்லன்னா அது நாயகவே வளராது

நாய்கள் பொதுவா வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குட்டி போடும்

நிறைய குட்டியெல்லாம் போடாது..! வருசத்துக்கு நான் நாய்க்கு பண்ணுற செலவுல பாதி காசுக்கு கூட குட்டிய விற்க முடியாது அதனாலயே வீட்டுல சொந்தகாரன்கிட்ட திட்டு வாங்கியது உண்டு ஆனா நான அதெல்லாம் பெருசா கண்டுக்குறது இல்ல..!

நாட்டு நாயை பாதுகாக்கனுமுன்னா நீங்க கேக்குறவங்களுக்கு இலவசமாக கொடுக்கலமே அப்புடின்னு சில முற்போக்கு வாதிகள் வருவார்கள் என்பதை அறிவேன்..! ஏதோ ஒரு நாள் பழக்கத்தில் பழகிய முகம் தெரியாத பலருக்கும் நான் ஆசைப்பட்டே பல குட்டிகளை கொடுத்துள்ளேன் அந்த திருப்தி போதும்..!

இல்ல இதெல்லாம் நம்ப முடியாது அப்புடின்னு நினைக்கின்ற முற்போக்கு வாதிகளே முடிஞ்சா பெண்நாய்களை ஆண்நாய்களுக்கு சமமாக வளர்த்து நீங்கள் இலவசமாக பலருக்கும் குட்டி கொடுத்து நாட்டு நாய் இனங்களை பாதுகாக்கும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

இதுல எது பெண் நாய், ஆண் நாய் அப்புடின்னே உங்களால கண்டுபுடிக்க முடியாது முடிஞ்சா இதுல எது பெண் எது ஆண் அப்புடின்னு கமாண்ட் பண்ணுங்க..!

இந்த பதிவு படிச்சிட்டு நானும் நாய் வளர்க்கனும் அப்புடின்னு குட்டி வாங்கி வளர்த்துட்டு கொஞ்ச நாளில் அதுகளை கவனிக்காம விட்டு தெருவில் விட்டு விட வேண்டாம் அதற்கு நீங்கள் வளர்க்காமல் இருப்பதே சிறப்பு

நன்றி

இந்த நாய்களோட விளையாட்டு வீடியோ ஒன்னு விவசாயத்தை காப்போம் யூடியூப் சேனல்ல இருக்கு விருப்பபட்ட போய் பாருங்க லிங் கீழ கொடுக்குறேன்

வீடியோ: http://youtube.com/c/விவசாயத்தைகாப்போம்

You might also like
1 Comment
  1. Jayanthan says

    I would like to buy Rajapalayam dog. Can u give a details.

Leave A Reply

Your email address will not be published.