நிலக்கடலை மரபணு மாற்றப்பட்டது தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளதா..?சில சூழ்ச்சி தந்திரங்கள்..!

0 1,384

இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிடுவதில் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டினாலும் பொதுமக்கள், மற்றும் பல விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தவண்ணமே உள்ளனர்..!

அந்த வகையில் கத்தரி, கடுகு தடைசெய்யப்பட்டாலும் பருத்தி இன்றளவும் பயிரிடப்படுகிறது..!

இந்தியாவில் நிலக்கடலையில் ஹைப்ரிட் என்ற வகைகள் உருவாக்கப்பட்டது தவிர மரபணு மாற்றப்படவில்லை..!

இன்றளவும் இனத்தூய்மையான நிலக்கடலை விருத்தாச்சலம், கோவில்பட்டி பகுதியில் பயிரிடப்படுகிறது ஆகவே தான் கோவில்பட்டி கடலை மிட்டாய் ருசியாகவும் பேமஸ்சாகவும் உள்ளது

பாதாம் உயர்ந்தது நிலக்கடலை தாழ்ந்தது என்று சமுக வலைதளங்களில் ஒரு பதிவு உலாவுகிறது அது முற்றிலும் தவறு, பொய்

சமூக வலைத்தளங்களில் வரும் எந்த ஒரு பதிவையும் ஆதார தன்மை இல்லை என்றால் நம்பாதீர்கள், நீங்கள் அதன் உண்மையை தேடி ஆராய முயலுங்கள்..!

நிலக்கடலை,

100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து

ஆற்றல் 570 kcal 2390 kJ

மாப்பொருள் 21 g

– சர்க்கரை 0.0 g

– நார்ப்பொருள் (உணவு) 9 g

கொழுப்பு 48 g

– நிறைவுற்ற கொழுப்பு 7 g

– ஒற்றைநிறைவுறா கொழுப்பு 24 g

– பல்நிறைவுறா கொழுப்பு 16 g

புரதம் 25 g

நீர் 4.26 g

தயமின் 0.6 mg 46%

ரிபோஃபிளாவின் 0.3 mg 20%

நியாசின் 12.9 mg 86%

பான்டோதெனிக் அமிலம் 1.8 mg 36%

உயிர்ச்சத்து பி6 0.3 mg 23%

இலைக்காடி (உயிர்ச்சத்து பி9) 246 μg 62%

உயிர்ச்சத்து சி 0.0 mg 0%

உயிர்ச்சத்து ஈ 6.6 mg 44%

கால்சியம் 62 mg 6%

இரும்பு 2 mg 16%

மக்னீசியம் 184 mg 50%

பாசுபரசு 336 mg 48%

பொட்டாசியம் 332 mg 7%

துத்தநாகம் 3.3 mg 33%

ஐக்கிய அமெரிக்கா அரசின்

வயதுக்கு வந்தவருக்கான,

உட்கொள்ளல் பரிந்துரை .

நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது. நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது.
நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுக்காக்கிறது.
நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையையும் பராமரிக்கவும் செய்கிறது.

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது தீமை செயும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.
நிலக்கடலையில் உள்ள ஒமேகா -3 சத்தானாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இந்த தகவலை உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.