எச்சரிக்கை..! குழந்தையின் உயிரோடு விளையாட வேண்டாம்..!

0 10,153

நேற்று தனது ஒரு வயது குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் சளி என ஒரு பெண்மணி அழைத்து வந்திருந்தார்.

காய்ச்சல் சனிக்கிழமையிலிருந்து அடிப்பதாகக் கூறினார்.

சனிக்கிழமை இரவு வேலை முடித்து வீடு திரும்பிய இவரது கணவர் மெடிக்கல் ஸ்டோரில் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் சளி என்று கூற

அவர்களும் இரண்டு டானிக்குகள் கொடுத்துள்ளனர்.

இருமலுக்கு ஒன்று
காய்ச்சலுக்கு ஒன்று என

காய்ச்சல் டானிக் மற்றும் இருமல் ப
டானிக் இரண்டையும் 2.5 மில்லி கொடுக்கச்சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்

இதில் காய்ச்சல் டானிக்கை 2.5 மில்லி கொடுக்கச்சொன்னது ஓரளவு சரியே

காரணம் அந்த பையனின் எடை 8 கிலோ

பாராசிடமால் கொடுக்க வேண்டிய அளவு
குழந்தையின் எடையை (கிலோ) பதினைந்தால் பெருக்கினால் கிடைக்கும் .

இவ்வாறு ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம்

இந்த குழந்தைக்கு 8 ( குழந்தையின் எடை) * 15 = 120 மில்லி கிராம் கொடுக்க வேண்டும். ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை 120 மில்லி கிராம் பாராசிடமால் கொடுக்கலாம்

அந்த மெடிக்கல் சாப் வைத்திருப்பவர் கொடுத்த
காய்ச்சல் டானிக்கில் 5 மில்லியில் 250 கிராம் பாராசிடமால் அடங்கியிருக்கிறது

ஆகவே 2.5 மில்லி = 125 மில்லி கிராம் கொடுக்கச் சொன்னது சரி.

ஆனால் விபரீதம் எங்கு வருகிறது பாருங்கள்.

கூட சளி இருமலுக்கு என ஒரு டானிக்கை கொடுத்துள்ளார்கள்

அதில் சளி இருமலை நிறுத்த வேண்டிய மருந்துகளின் ஊடே பாராசிடமாலும் கலந்திருக்கிறது.

அதிலும் 2.5 மில்லி கொடுக்கச்சொல்லியிருக்கிறார்.

அந்த டானிக்கில் 5 மில்லியில் 125 மில்லி கிராம் பாராசிடமால் இருக்கிறது.
ஆக, 2.5 மில்லியில் 62.5 கிராம் பாராசிடமால் இருக்கும்.

மேலும் எப்போதெல்லாம், எந்த கால இடைவெளியில் இந்த இரண்டு டானிக்கையும் கொடுக்க வேண்டும் என்று கூறி அனுப்பவில்லை.

இதனால் ஒவ்வொரு முறை இந்த இரண்டு டானிக்கையும் கொடுக்கும் போதும் தேவைக்கு மீறி 62.5 கிராம் பாராசிடமால் ஓவர் டோசாக குழந்தைக்கு இரண்டு நாட்களாக கிடைத்துள்ளது

என்னிடம் குழந்தையை அழைத்து வரும் போது வாந்தி , வயிற்று வலி இருந்தது.
அதற்கு காரணம் தகுந்த மருத்துவரை நாடாமல் மெடிக்கல் ஸ்டோரை நம்பி சிகிச்சை அளித்ததே என்று ஆணித்தரமாக கூறலாம்.

குழந்தைகளுக்கு பாராசிடமால் ஓவர் டோஸ் ஆனால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு மரணம் வரை கூட எளிதில் சம்பவிக்கும்.

மருத்துவத்திற்கு தகுதியான மருத்துவர்களை தேர்ந்தெடுப்போம்.

மருந்தகங்களில் மருத்துவர்களின் பரிந்துரையோடு மட்டும் மருந்துகள் பெறுவோம்.

சுய மருத்துவம் கேடு விளைவிக்கும்

குழந்தைகள் உயிரோடு விளையாட வேண்டாம்

Dr.ஃபரூக் அப்துல்லா,MBBS.,(M.D.,)
சிவகங்கை

தவறாமல் பகிருங்கள்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.