தண்ணீரில் கெமிக்கல் கலந்தவுடன் பாலாக மாறிவிடும் என்று வெளிவந்த வீடியோவின் உண்மை என்ன..?

0 1,000

பெரும்பாலும் அமிலங்கலுடன் நீர் வினைபுரியும் போது நிறங்களை வெளிப்படுத்தும் அல்லது ஆற்றலை வெளிப்படுத்தும், ஆனால் சமூக வலைதளத்தில் லைக் வாங்குவதற்கு யாரோ ஆசைப்பட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர், அதில் அவர்கள் பயன்படுத்தியது நாம் பயன்படுத்தப்படும் டெட்டாலை ஒரு டம்ளரில் எடுத்து அதில் நீரை ஊற்றும் போது அவை வெண்மை நிறத்திற்கு வினைபுரிவதை நீங்களே வீட்டில் பார்த்திருக்க கூடும்…!

பால்டாயில்,பூச்சிவிசங்கள், பூச்சிகொல்லியாக பயன்படுத்தப்படும் 90%விசங்களில் தண்ணீரை கலக்கும் போது பால் போல வெண்மை நிறத்தை அடையும்..!

அதிகாரபூர்வமாக விற்பனை பாலில் கலக்கப்படும் நச்சுகள் என்னவென்றால் யூரியா யூரியா என்பது வயலுக்கு உரமாக பயன்படுத்தப்படும் நைட்ரஜன் நிறைந்த வேதிப்பொருள்,இவை கலப்படம் செய்வதற்கான முக்கிய காரணம் பாலினை இரண்டு மூன்று நாட்கள் கெடாமல் பார்த்துக் கொள்வது

சோப்பு நுரை,பால் பவுடர், சுண்ணாம்பு, போன்றவைகள் லாப நோக்கிற்காக கலப்படம் செய்யப்படுகிறது, எது சுத்தமான பால் என்று ஆயிரம் கடைகளில் ஏறி இறங்கினாலும் நகரங்களில் சுத்தமான பால் கிடைக்க வாய்ப்பில்லை,என்பதே நிதர்சனம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.