மாங்காய்க்கு உப்புத்தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடுபவரா நீங்கள்..?

0 268

மாங்காயை பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும். மாங்காய் சீசன் வந்தால் போதும். மாங்காயை விரும்பி சாப்பிடுபவர்கள் எல்லோருமே அதை வெறுமனே சாப்பிடுவதை விட மிளகாய் தூள் மற்றும் உப்பு கலந்து அதில் தொட்டு சாப்பிடுவார்கள். அப்படி செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

மாங்காயை உப்பு, மிளகாய் தூள் சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்:-

கோடையில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தால் உடலில் ஏற்படும் நீர்ச்சத்தை இழக்கிறது. இதன் மூலம் சில சமயங்களில் சுய நினைவை கூட இழக்க நேரிடும். அதை தடுக்க மாங்காயை சாப்பிட்டாலே போதும்.

மாங்காயில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை சீராக்கி இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

மாங்காயில் அதிகப்படியான நார்ச்சத்துகள் மற்றும் ஆவியாக கூடிய உட்பொருள்கள் அடங்கியுள்ளன. இதனால் செரிமான மண்டலம் சீராகி வயிற்று பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவும்.

அடிக்கடி நோயால் அவதிப்படுபவர்களா நீங்கள்? தினமும் மாங்காயை சாப்பிட்டாலே போதும். அதில் உள்ள வைட்டமின் – சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.உடலில் ஏற்படும் அசிடிட்டியை கட்டுபடுத்துவதுடன் கல்லீரல், பித்தப்பை, குடல் போன்றவற்றில் ஏற்படும் பாக்டீரியாக்களின் தொற்றுகளை குறைக்கும்.

மாங்காயை சாப்பிடுவதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றி பருக்கள் வராமல் தடுக்கும். மாங்காயினை துண்டுகளாக்கி கொதிக்க வைத்து அந்த நீர் ஆறியவுடன் முகத்தினை கழுவினால் சருமம் பிரகாசமாக மாறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.