நெல் இப்படித்தான் இருந்தது, இதன் உள்ளேயிருந்த அரிசையைத்தான் நாங்களெல்லாம் சாப்பிட்டோம

0 227

வீட்டிற்கு எதிரே உள்ள நிலத்தில், நேற்று எந்திரம் மூலம் அறுவடை நடந்துகொண்டிருந்தது. சாலையில் பைக் ஒன்றில் தனது மகனை அமரவைத்து பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர், வண்டியை நிறுத்தி.

‘இப்புடிதான் நெல்லு அறுப்பாங்க..’ எனக் காட்டினார். மனித உதவி எதுவும் தேவைப்படாமல், தனிமையில் சுழன்று சுழன்று வைக்கோலையும் நெல்லையும் தனித்தனியே பிரித்துக் கொட்டிக் கொண்டிருந்த எந்திரத்தை அவன் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் விடுமுறை நாட்களில் வயல்களில் பொழுதை கழித்த தருணங்கள் கண்முன் வந்தது.. கதிர் அறுப்பவர்களுக்கும், நெல் அடிப்பவர்களுக்கும் வீட்டிலிருந்து நான் காபி எடுத்துக் கொண்டு சென்ற நாட்கள் பசுமையாய் நிற்கின்றன.

மனிதர்கள் செய்துகொண்டிருந்த விவசாயத்தை இன்று எந்திரங்கள் செய்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில வருடங்களில், ‘நெல் இப்படித்தான் இருந்தது, இதன் உள்ளேயிருந்த அரிசையைத்தான் நாங்களெல்லாம் சாப்பிட்டோம்..’ என்று குழந்தைகளுக்கு காட்டும் நிலை வந்துவிடுமோ என்னவோ..?

You might also like

Leave A Reply

Your email address will not be published.