தெருநாய்கள் இல்லை என்றால் 90%நாய்கள் அழிந்திருக்கும்..! காமம் பொதுவுடமை..!

0 973

ஏற்கனவே நாய்களை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டோம் அதில் பலரும் ஊக்கம் தரும் வகையில் மறுபதில் அளித்தனர்.

ஒருவேளை அந்த கட்டுரையை நீங்கள் படிக்கவில்லை என்றால் அதை படித்து விட்டு இதை படிக்க வாருங்கள்..!

????????????

ஏன் “தெரு நாய்கள்”மட்டும் எங்கும் உள்ளது..? காம உணர்வு நாய்களின்…

தெருநாய் அப்புடின்னு இங்க ஒரு இனம் கிடையாது மனிதனால் கைவிடப்பட்ட நாய்களின் பெயரே நாளைடைவில் தெருநாயாக உருமாறியது..!

தெருநாய்கள் அதிகமானதிற்கு காரணம் காமம் எனும் பொதுவுடமை தான்..! என்னாட காமம் அப்புடின்னு சொல்றாங்களே அப்புடின்னு நினச்சிடுப்பிங்க சிலர் முகம் சுழிச்சிடுபிங்க ஆனா இதான் இங்க பிரச்சினையே..!

தீனி போட்டு கோழி வளர்குறது பாசத்துக்காக அல்ல கறிக்காக , புல் போட்டு மாட்ட வளர்குறது பாசத்துக்கா மட்டும் இல்ல பாலுக்காவும், இறைச்சிக்காவும், தோலுக்கு, இன்னும் என்ன என்னவோ இருக்கு..!

ஆனால் இந்த நாய்க்கு..?

நாய் பொழப்பு பொழைக்கிற அப்புடின்னு பல பேர பலர் இடத்தில் திட்டுறத கேட்டு இருப்பிங்க..!

ஆதிமனிதன் கோழியையும்,ஆட்டையும், மாட்டையும் சாப்புட்ட மாறி நாயையும் சாப்புட்டு‌ இருந்தால் இப்போ தெருவோர நாய் இருந்து இருக்காது..!

இதையெல்லாம் மேல சொன்ன பழைய பதிவில் தெளிவா சொல்லியிருக்கோம்

தெருநாய்கள் இல்லைன்னா எப்படி நாய் அழிந்திருக்கும்..?

ஆமாங்க நாய் வளர்க்கும், வளர்க்க விரும்புவர்கள் ஆண் நாய்களை மட்டுமே வளர்க்கிறார்கள்..! இப்புடியெல்லாம் இருந்தா இந்த பெண் நாங்களை யாரு தான் வளர்க்குறாங்க..?

பண்ணை வீடு, பரம்பரை நாய் பிரியர்கள் மற்றும் சிலரால் மட்டுமே பெண் நாய்கள் இன்றளவும் கௌரவமாக உள்ளது மீதமுள்ள 90% பெண் நாய்கள் வீதியில் தான் உள்ளது..!

வீதியில் உள்ள பெண் நாய்கள் குட்டி போடும் போது அந்த குட்டியில் ஆண் குட்டிகளை மட்டும் தேவைப்படுவோர் எடுத்துவிட்டு பெண் குட்டியை வீதியிலே விட்டு விடுகின்றனர்..!

இது நாளைடைவில் குட்டியிடும் இதே போல ஆண் குட்டிகள் வீடுகளில் வாழ வந்துவிடும் பெண்நாய்கள் வீதியிலயே உலாவும்..!

நாய்கள் நினைத்தால் மனிதர்களை வேட்டையாடி உயிர் வாழமுடியும், ஆனால் நாயிக்கு வெறி என்ற ஒரு நோய் வரும் வரை மனிதர்களுக்கு பணிவாகவே இருக்கும்

உண்மையில் ஆண் நாய்களை விட பெண் நாய்களே விசுவாசமாக இருக்கும் இருந்தும் இவை ஏன் தெருவில் விடப்படுகிறது என்று நீங்கள் நினைப்பீர்கள்..!

அதற்கான காரணம் பெண் நாய்களின் காமம் மதிக்கப்படாததே, வீட்டில் வளர்த்தால் எங்காவது ஒரு ஆண் நாயோடு சென்று வீட்டில் வந்து குட்டி போட்டுவிடும்..!

இப்போ தலைப்ப படிங்க புரியும்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.