தாய்தமிழ் திருநாட்டின் பெருமைகள் பற்றி தெரியுமா..? கடைசி ஒருவரியில் ஒட்டுமொத்த பெருமையும் உள்ளது..!

0 593

என் நாசிக்கு அருகில் வந்த பின், காற்று தான் செல்லும் வழி மறந்து, என்னுள் செல்ல மறுத்தாலும்,

நான் மறித்து போனாலும்!

மறு பிறவி எடுத்தேனும் என் தமிழ் திருநாட்டின் பெருமைகளை கேட்போருக்கு சொல்லுவேன்….

என் தமிழ் திருநாட்டின் பெருமைகளை சொல்ல நினைத்தால் !!!
என் தமிழ் திருநாட்டின் பெருமைகளை சொல்ல நினைத்தால் !!!

எந்த தமிழனுக்கும் வார்த்தைக்கு பஞ்சம் இருக்காது!!!
சொல்லும் அவனுக்கு ஆயுள் மட்டும் பத்தாது!!!

ஒன்று ஒன்றாய் சொல்லுகிறேன் !

உலகுக்கு பொதுமறை கொடுத்ததும் என் தமிழ் நாடு!!!
கடை ஏழு வள்ளல்க ள் வாழ்த்தும் என் தமிழ் நாடு!!!

காவிரி, தென்பென்ணை, பாலாறு பாய்த்து வளம் கொழிக்கும் என் தமிழ் நாடு!
மூத்த மொழி பேசும் மூத்தோர்கள் வாழ்ந்தது, வாழ்வது என் தமிழ்நாடு!

வண்ணத்துபூச்சி சிறகின் ஓவியத்தை விட அழகாய் அமைத்தது என் தமிழ்நாடு!
கன்னிபெண்ணின் புன்னகைக்கு போட்டி போடும், முல்லையின் கொடி படர,
தேர் கொடுத்த இடம் இந்த தமிழ் நாடு!

பிற மொழி கவிக்கு சிலை எடுத்தது என் தமிழ்நாடு!
பொய்யா மொழி கவிக்கும் சிலை எடுத்தது என் தமிழ்நாடு!

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று சென்னவர் வாழ்ந்தது இந்த தமிழ்நாடு!
மண்ணின் பெருமை காக்கும் பெண்கள் இருப்பதும் என் தமிழ்நாடு!

நீதிக்காக தமையனை தேரை ஏற்றி கொன்ற மன்னன் வாழ்ந்தது என் தமிழ் நாடு!
தன் பிழைக்காக உயிர் நீத்த மன்னன் இருந்தது என் தமிழ் நாடு!

கலைக்கு மதிப்பு கொடுப்பது என் தமிழ் நாடு!
கலைக்கு மரியாதை செய்தவர்களுக்கு ,அதிகாரம் கொடுத்தது அழகு பார்த்தது என் தமிழ் நாடு!

என் தமிழ் திருநாட்டின் பெருமைகளை எழுத முயற்சித்தால் !!!
உலக காகித ஆலையின் உற்பத்தி பத்தாது!!!
எழுதும் என் செந்நிற குருதியின் வேகமும் நிற்காது!!!

என் மனதின் திறவுகோலான, என் எழுதுகோலுக்கு ஓய்வு கொடுக்க நினைக்கிறன்!
உழைக்கும் மனிதனுக்கு ஓய்வு ஒருமுறை என்பதினை நினைத்து மீண்டும் என் மனதினை திறக்கிறேன்!

நான் பிறந்த பொழுது அழுதேன் !
என் இதயம் மௌன கீதம் வாசிக்கும் நேரம் நெருகியதிணை அறிந்து மகிழ்ச்சி!
ஏனென்றால் என் காற்று அடைத்த உடல் கூட என் தமிழ் நாட்டின் மண்ணுக்குள்!

என் தமிழ் நாடு ! என் தமிழ் நாடு ! சுயநலம் மிக்க வார்த்தை ,
இந்த சுயநலம் எனக்கு போதும்!!!

இப்படியெல்லாம் வர்ணித்த தமிழ்நாட்டை பற்றி பேசவே இப்போது வெட்கப்படுகிறேன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.