சிவகங்கை பகுதி மக்களுக்கு வாடி ஜல்லிக்கட்டில் மாடு அடைப்பது சவாலான ஒன்று தான்

0 466

சிவகங்கை என்றாலே வெளிவிரட்டு மஞ்சுவிரட்டு தான் புகழ் பெற்றதாகும். பரிசுக்கு ஆசை படமாட்டார்கள், அதை போல் காளையை அவிழ்த்து விடுவதிலும் இவர்களுக்கு ஒரு வழிபாடு உண்டு.

வெளிவிரட்டு வீடியோ, இடம் : அரளிப்பாறை

ஆனால் வாடி ஜல்லிக்கட்டிற்க்கு வரும் இவர்களுக்கு புதுமாயாய் தெரிகின்றது. இரண்டு நாள்களுக்கு முன்பே வந்து அனுமதி சீட்டு வாங்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடக்கும் முன் இரவு நேரத்தில் காளைகளை வரிசையில் அடைக்க வேண்டும், 500, 600 காளைகளுடன் வரிசையில் நின்று 6 மணி நேர காத்திருப்பிற்க்கு பிறகு காளைகளை அவிழ்ப்பதற்க்குள் இவர்களின் கஷ்டம் இனி எப்பையும் வாடி ஜல்லிக்கட்டிற்க்கு வரக் கூடாது என்று எண்ண வைத்துவிடுகின்றது மனநிலை.

சிவகங்கை மாவட்டத்திற்க்கு வெளிவிரட்டு பெயர் பெற்றதாகும். இங்கு காளைகளை 10 மணிக்கு மேல் கொண்டு வந்தால் போதும், நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் தன் காளைகளை அவிழ்த்து பழக்கியவர்கள், வெளிவிரட்டில் பரிசுகள் இல்லாவிட்டாலும் பெயரும் புகழும் கிடைக்கும். காளையே வீட்டில் வழிபட்டு அருள் இறக்கி காளையை மஞ்சுவிரட்டுக்கு கொண்டு வருவோர்களை ஒரு நாள் முன்பே களத்திக்கு வந்து வரிசையில் நின்று காளை அவிழ்க்க சொன்னால் சற்று யோசிப்பார்கள்.

சரி காளைகளுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி சீட்டு வரியாக அவிர்த்தாலும் பொறுமையாக இருப்பார்கள் இங்கு தான் 50 காளைகள் அவிழ்த்த உடனே வரிசையை கலைத்து போலிஸ்காரர்களிடம் அடியும் வாங்கி கடைசியில் காளை அவிழ்க்காமலே வீடு திடும்பிகிறார்கள். இப்படி ஏற்ப்பட்ட மனநிலை உருவாகிய பின்பு எப்படி இவர்களால் வாடி ஜல்லிக்கட்டி நேசிக்க முடியும். இதனாலே வாடி ஜல்லிக்கட்டு என்றாலே வெளிவிரட்டில் காளைகளை அவிழ்த்தவர்களுக்கு பெரிய ஈடுபாடு இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.