காவிரி ஆணையம் அமைத்து விவசாயிகள் சாதனை..!

0 202

ஒரு கிராமத்துப் பாசன நீர் ஆணையம் !

மதுரை மாவட்டத்தில்,
முல்லைப் பெரியாற்று
பாசனப் பகுதி நிலங்களில்,
பயிர்கள் கதிர் பிடிக்கும்
நேரத்தில், தண்ணீர்
பற்றாகுறை ஏற்பட்டதால் ,
பம்புசெட்டுகளைப் பயன்படுத்தி
நீர் பாய்ச்சுவதுதான் ஒரே வழி
என்ற சூழ்நிலை ஏற்பட்டது .

எங்கள் நிலம் அமைந்திருக்கும்
கோட்டைமேடு கிராமத்தில் உள்ள
பம்புசெட் உரிமையாளர்களாக
இருக்கும் விவசாயிகளான
திரு.M. அழகர்
திரு.C.அய்யனார்
திரு.C.கணேசன் மூவரும்
நீரின்றி தவிக்கும் விவசாயிகளுக்கு
உதவி செய்திட முன்வந்தனர்

பம்புசெட்டுகளுக்கு,
காலை அல்லது இரவு
12 மணி நேரம் மட்டுமே
மின்சார வசதி உண்டு.
அந்த குறைவான நேரத்திலும்,
அவர்கள் நிலங்களுக்கு தண்ணீர்
பாய்ந்த பின்னர், மற்ற விவசாயிகளின்
நிலங்களுக்கு நீரை வழங்கினார்கள் .

இதில் குறிப்ப்பிடத்தக்க விஷயம்
என்னவென்றால், தெரிந்தவர் அறிந்தவர்
சொந்தக்காரர்கள் யாருக்கும் சலுகை
காட்டாமல், தங்களின் மூன்று
பம்புசெட்டுகளிலிருந்தும் தண்ணீரை
ஒரே வாய்காலில் மொத்தமாக திருப்பி
விட்டு அந்த வாய்க்காலில் உள்ள
ஒவ்வொரு வயல்களுக்கும் வரிசையாக
தண்ணீரை வழங்கினார்கள் .

யாருக்கும் எந்த சலுகையும் கிடையாது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு, கர்நாடக அரசு
பணிய மறக்கலாம், ஆனால் இவர்களின்
ஆணைக்கு விவசாயிகள் அனைவரும் கட்டுப்பட்டோம்.

ஒருவருக்கு தண்ணீர் பாய்ந்தவுடன்
அடுத்த நிலத்தின் விவசாயி அந்த
இடத்தில் இல்லை என்றாலும்
இவர்களே அந்தக் குறிப்பிட்ட
நிலத்திற்கும் தண்ணீரைப்
பாய்ச்சிவிடுவார்கள் . அதன்
பிறகுதான் அடுத்த நிலத்திற்கு
தண்ணீர் பாய்ச்ச முடியும் . இதில்
யாரும் எந்தச் சலுகையும் பெற்றிட
முடியாது.

இதில் திரு.அய்யனார் அவர்களும்,
திரு.கணேசன் அவர்களும், எங்கள்
ஊரான மாடக்குளத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களிடம் இருந்து எனக்கு, எந்தச்
சலுகை வேண்டும் என்றாலும்
கிடைக்கும், ஆனாலும் தண்ணீர்
பாய்ச்சுவதில் மட்டும் சலுகை
பெறமுடியாது வரிசை
முறையில்தான் வரமுடியும் .

இதில் திரு.அழகர் 1971-74 ஆண்டு
இளங்கலை பட்டம் பெற்ற பட்டதாரி
ஆனாலும், எந்த அரசுப் பணிகளுக்கோ
தனியார் நிறுவனங்களுக்கோ வேலைக்குச்
செல்லாமால் விவசாயத்தை மட்டுமே
தன்னுடைய முழுநேரப் பணியாக்கிக்
கொண்டவர் என்றால் வியக்காமல்
இருக்க முடியாது .

இரவு பகல் தூங்காமல், வயல்களிலும்
வாய்க்காலிலும், அலைந்து திரிந்த
விவசாயிகளுடன், திரு.அழகர்
அவர்களும், திரு.அய்யனார்
அவர்களும், திரு.கணேசன் அவர்களும்
தங்கள் தூக்கத்தையும் மறந்துவிட்டு
துணை நின்றதை மறக்க முடியாது .

இவர்கள் உருவாக்கிய, பம்புசெட்
தண்ணீர் பகிர்ந்தளிக்கும் திட்டம்,
என்னைப் போன்ற பல விவசாயிகளை
கடும் நெருக்கடியிலிருந்து காப்பாற்றியது,
வாழவைத்தது என்றால் மிகையல்ல .

பல்லாண்டு வாழ்க அந்த மாமனிதர்கள் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.