காவல்துறை கண்ணில் மண்ணை தூவிய இளைஞர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு – வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய கல்லூரி மாணவர்கள்..!

0 245

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டுப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

கல்லூரி மாணவர்கள்

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் ஆலைக்கு அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 43 நாள்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இவர்களுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் கைகோக்க, போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவல்துறையின் அனுமதி மறுக்கப்பட்டபோதிலும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்து நீதிமன்ற அனுமதியோடு இந்த ஆலைக்கு எதிராகக் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். 2,000 பேர்கூட கூட்டத்துக்கு வர மாட்டார்கள் என எதிர்ப்பார்த்த காவல்துறையினருக்கு பல ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டதால் திணறிப்போயினர்.


இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
‘தூத்துக்குடியில் ஒருநாள்கூட இருக்க முடியாது’.. ஸ்டெர்லைட் தீமைகள் சொல்லும் ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன்
பசுமை சந்தை
டெல்டாவில் நிலத்தடி நீர் விவரம் (டி.எம்.சியில்)

சட்டம் ஒழுங்குப் பிரச்னையைக் காரணம் காட்டி காவல்துறை, பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டபோதிலும் அந்தந்தப் பகுதி மக்கள் இருசக்கர வாகனங்களிலும் நடந்தும் பேரணிபோலவே கூட்ட மேடையை நோக்கி வந்ததைக் காவல்துறையினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இப்போராட்டத்துக்கு பல தரப்பினரும் ஆதரவு அளித்து வரும் நிலையில், இன்று தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பி கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து இந்திய மாணவர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சுரேஷ் கூறுகையில், `கடந்த ஜனவரி மாதம் முதல் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், இன்று வரை அரசு சார்பில் யாரும் வந்து மக்களை சந்தித்துப் பேசவில்லை. ஆனால், சட்டமன்றக் கூட்டத்தொடரில்கூட உள்ளூர் எம்.எல்.ஏ-வும் அமைச்சரும் என யாருமே வாய் திறக்கவில்லை. தேவையில்லாத பிரச்னைகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்படுகிறது.

இந்த அரசையும் ஆட்சியாளர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், கல்லூரி மாணவர்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தைப்போல விரிவுபடுத்தப்படும். முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குத் தேர்வுகள் நடைபெறுவதால் இந்தப் போராட்டத்தில் மாணவிகள் கலந்துகொள்ளவில்லை. நாளை முதல் தொடர்போராட்டத்தில் அவர்களும் ஈடுபடுவார்கள். ஆலை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.