கருங்குருவை நெல் அரிசி பற்றி அனுபவ பதிவு விளைச்சல் புரியாத புதிர்..!

0 599

கருங்குருவை நெல்\அரிசி பற்றி அனுபவ பதிவு விளைச்சல் புரியாத புதிர் … அறிவியல் பூர்வமாக அறிந்து இருக்கவில்லை இந்த இயற்கை விவசாயத்தையும் ..கருங்குருவை பாரம்பரிய நெல்லையும் மற்றும் என் இயற்கைக்கு மாறிய நிலத்தையும்.

ஆனால் என் உழைப்பையும் இயற்கையின் மேல் உள்ள நம்பிக்கையும் நம்புகிறேன்.

ஓர் ஆண்டுக்கு முன்பு கருங்குருவை விதைநெல் சாரதா ஆஷ்ரமத்தில் வாங்கினேன். விதைமுளைப்பு நன்றாக இருந்தது மேட்டு பாத்தி நாற்றங்காலில்.

2 ஏக்கருக்கு 35 கிலோ விதை நெல் விதை நேர்த்தி செய்து விட்டேன். நாற்றாங்காலுக்கு போடபட்ட எருவின் அளவு 2 டன் (அ) 1 டிப்பர்..

அதை தவிர எருக்கன் செடி இலை மற்றும் இதர இலை தழைகள் 2 டிப்பர் அளவு.25 வது நாள் ஆள் நடவு 2 அல்லது 3 நாற்றுகள் வைத்து நடப்பட்டது….

நாற்றுகள் பற்றாமல் போனது… 1 1\4 ஏக்கர் நடப்பட்டது. மீதம் உள்ள நிலத்திற்கு வேறு சாதாரண நெல்லை நடவு நட்டேன்.

நடவு நட்ட 15 மற்றும் 45 நாளிள் ஆள் களை எடுப்பு.அமிர்தகரைசல் தண்ணீரில் கரைத்து விடுதல், ஊட்ட மேற்றிய தொழுஉரம் 3 முறை சரியான இடை வெளியில் மற்றும் பஞ்சகாவியா தெளித்தள்.

2 வது களை எடுப்பின் போது நன்றாக தூர்கட்டி இருந்தது 30 தற்கு மேல் 40 தற்குள்.. நல்ல செழிப்பான வளர்ச்சி நல்ல உயரம் எந்த பூச்சி தாக்களும் இல்லை பயிர் நல்ல ஆரோக்கியம் .அப்போது இருந்த பயிரின் தோற்றத்திற்கு 30 மூட்டைக்கு( 1 மூட்டை அளவு 75 கிலோ) விளைச்சல் 1 ஏக்கர் அளவுக்கு குறைவில்லாமல் வந்து இருக்க வேண்டும்..

நெல் பயிர் பூ வருவதற்குள் நிலத்தில் சாய்ந்து முழுவதுமாக படுத்தது. இது ஏன் என்று புரியவில்லை? இதுவே குறைந்த விளைச்சலுக்கு காரணம்.

ஆனால் விளைச்சல் வந்தது 17 மூட்டை அளவு. பாதி அளவு விளைச்சல் குறைந்தது அல்லது வந்தது.

இந்த ஏன் என்ற கேள்வி … இது தான் எனக்கு புரியாத புதிர் இதுவரை ?

அதே நிலத்தில் இதற்கு முன் ஆத்தூர் கிச்சலி நல்ல விளைச்சல் எப்படி இந்த மாற்றம் கருங்குருவையில் மட்டும்.

பட்டம் மாறியதா ? குருவை பயிர் தானே ? பெயரில் குருவை என்று உள்ளது கருங்குருவையாக . யாரேனும் விடை தெரிந்தால் கூருங்களேன். ஏன் படுத்தது பயிர் கருவையில் 12 மூட்டைக்கு மேல் நழ்டமாகியது அல்லது விளைச்சல் குறைந்தது.

சம்பா பட்டத்திலும் பரிசோதித்தேன் 2 வீசம் அளவு மட்டும் நேரடி விதைத்து.

நேரடி விதைப்பில் களை அதிகமாக வந்தது நெல் முளைத்து வருவதற்குள். 2 முறை களை அகற்றி ஊட்ட மேற்றிய தொழுஉரம் 2 முறை மற்றும் பஞ்சகாவியா தெளித்தேன். பயிர் தூர் கட்ட வில்லை.விளைச்சல் மிக மிக குறைவு. மொத்த சம்பா விளைச்சல் 20 கிலோ அளவிற்கு.

இப்போது புரிகிறது இது சம்பா பட்டம் இல்லை என்று. ஆனால் புரியவில்லை

இப்போது கருங்குருவை நெல்லை அரிசியாக மாற்றி கொடுத்து கொண்டு இருக்கிறேன்.

என் குடும்பத்தினர்க்கு என் மேலும் கருங்குருவை யின் மேலும் கோபம்… இதை என் குடும்பத்தினர் ருசியான சாதமாக , இட்லி அல்லது தோசையாக அல்லது கொழக்கட்டையாக சாப்பிடும் போது…..கோபம் கண்டிப்பாக குறையும் என்று நம்புகிறேன்.

புரியாத புதிரான இந்த கருங்குருவை விளைச்சளை இந்த ஆண்டு குருவையிலும் தொடர்கிறேன்…..

இயற்கை விவசாயி , சுரேஷ்குமார்
விருத்தாசலம்
9449617689

You might also like

Leave A Reply

Your email address will not be published.