Playboy பிரண்ட்ஸ் ஆ கூட வச்சிட்டு எப்புடி இதெல்லாம் பற்றி பேச தான் மனசு வருதோ..?

0 849

இந்த கேள்வி முகநூல் பக்கத்தில் ஒருவர் கேட்டு இருக்காரு எனக்கு பள்ளி காலங்களில் பெரிதும் பெண்களை பற்றி பெரிதும் தெரியவில்லை காரணம் ஆண்கள் மட்டுமே படித்த பள்ளியில் படித்ததே, கல்லூரி காலம், சற்று வித்தியாசமாக கடந்தது

நான் வளர்ந்தது கிராமம் என்பதால் சாதியின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்படும், எப்படி சொல்ல வேண்டும் என்றால் மற்ற சாதி பெண்களிடம் பேசினாலே அதை தவறான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்து பழகிய சூழல் அது..!

ஆனால் கல்லூரி காலம் இதையெல்லாம் கடந்து சில உறவுகளை உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொள்ள துவங்கும் அதில் பலவகை உண்டு, எனக்கு தெரிந்து கல்லூரியில் காதல் என்ற பெயரில் ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் பயன்படுத்தி கொண்டு ஏதே ஒரு வகையை பூர்த்தி செய்து கொண்டார்கள் என்பதே 90% கல்லூரி காதல்..! இதற்கு என் நண்பர்களே சாட்சி

உடனே காதல அசிங்கபடுத்திட்டான்னு ஒரு கூட்டம் வரும் உண்மை என்னன்ன காதலர்கள் என்று கூறி காதலை அசிங்கபடுத்தியவர்களே அதிகம்..!

இங்க எல்லாரும் ஏதோ ஒரு வகையில காதல தேடி போயிருப்பாங்க ஏன்ன நம்ம வாழுற சூழல் அப்புடி..! காதல் இல்லை என்றால் தமிழ் சினிமா இல்லை, இப்போ புரிஞ்சி இருக்குமுன்னு நம்புறேன்..!

கல்லூரி காதல் புரிந்த பலரும் பல காரணங்கள் கூறி பிரிந்து விடுவார்கள் காரணம் குடும்ப நலன், சுற்றி உள்ள சூழல், மற்றும் நிறையவே, ஆனால் இதையெல்லாம் அறியும் முன்பே சில அந்தரங்களையும் அவனோடோ, அவளோடோ பகிர்ந்து கொள்கின்றனர், இதுவே சீரழிவின் முதல்படி.

எல்லாருக்கும் அக்கா , தங்கச்சி இல்ல அப்புடினாலும் அம்மான்னு ஒருத்தவங்க இருக்காங்க..! ஆனால் தற்போது அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்வதே உண்மையான காதல் என்று கூறி நம்பவைத்து படுக்கைஅறை வரை பகிர்ந்து கொள்கின்றனர் இதில் எதை அவர்கள் காதல் என்று நம்புகிறார்கள் என்று தான் தெரியவில்லை..!

பல பெண்களின் வாழ்க்கையிலும் அந்தரங்கத்திலும் விளையாடும் ஒரு நபருக்கு Playboy என்ற பட்டம் கொடுத்து அவர்களை கௌரவம் செய்வது போல பல சினிமா காட்சிகள், பல குறும்படங்கள் வெளியாகியுள்ளது. இது கூட ஒரு மறைமுக சீரழிவு தான்..!

Playboy பிரண்ட்ஸ் ஆ கூட வச்சிட்டு எப்புடி பெண்களின் பாதுகாப்பு பற்றி பேச தான் மனசு வருதோ ? அது உண்மை தான் தலைவா ஒருத்தன் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கிறான்னா அவன சுத்தி இருந்து வேடிக்கை பாக்குற நம்மாளும் தான் ஒரு காரணம்.!

பெண்களுக்கு கற்பு உள்ளது, அதனால் அவர்கள் அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும் என்பதில்லை மாற்றுக்கருத்து இல்லை அதே சமயம் ஆண்களுக்கும் இதனை கற்பித்தல் அவசியமாகிறது தற்போது..!

நமக்கு தெரிந்தே நமது நண்பன் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்கிறான் எனும் போது அந்த பெண்ணின் வாழ்க்கை சீரழிவுக்கு நாமும் ஒரு காரணமே என்பதை மறந்துவிடாதீர்கள்..!

மாற்றத்தை நோக்கி..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.