pizza மற்றும் அதிக கொழுப்பு, அதிக பாலாடை கட்டி உணவுகளையே பெண்கள் உண்டு வருவதால் எச்சரிக்கையாக இருங்கள்,அதிகம் பாதிக்கப்படுகின்றனர்

0 538

பெண் குழந்தை விரைவாக பருவமடைவதற்கு சுற்றுச்சூழலில் இருந்து அவர்கள் வாழ்க்கை முறை வரை பல காரணம் இருக்கலாம்.

  • அதிக மன‌ அழுத்தம்
  • காற்றில் நறுமணம் கமழ தெளிக்கப்படும் ரசாயனங்கள்
  • உணவில் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்
  • மரபுசார் வடிவமைப்பு செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் இரைச்சிகள்
  • நெகிழியில் இருந்து வெளிவரும் ரசாயனம் கலந்த உணவு
  • துரித உணவுகளில் சேர்க்கப்படும் ரசாயனம்
  • அதிக அளவில் இரைச்சி உட்கொள்ளுதல்
  • சாப்பாட்டில் போதிய அளவு சத்து இல்லாமை

இன்னும் பல காரணங்கள் உள்ளன.

இக்காலத்தில் பெண் குழந்தைகள் விரைவில் பருவம் அடைய பல காரணங்கள். உடல் ரீதியான வேலை செய்த நம் பழக்க வழக்கங்கள் மாறி வருகின்றன. நவீனமயமாக்கத்தின் ஒரு பக்க விளைவாக நான் இதை பார்க்கிறேன். உணவு, காய், கனி வகைகள் பழைய தூய்மையில் கிடைப்பதில்லை.

குழந்தைகளுக்கு அதிக அளவில் மன அழுத்தம், மன சோர்வு, தற்கால அதிகமான போட்டி உலகத்தில் மிக அதிகம். பருவ நிலை மாற்றம், சமூக ஊடங்கங்கள் போன்றவையும் பல மாற்றங்களை உடல், மன, புத்தி ரீதியாக கொண்டு வருகின்றன. சமூக ஊடகங்களே இக்காலத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு உலகமாகி விட்டதென்றால் அது மிகை இல்லை. சமூக ஊடகங்கள் லைக் மற்றும் கமெண்டில் வாழ்க்கை என்றாகிவிட்டது. அதன் மூலம் பெருமையும் அங்கீகாரமும் தேடுகிறார்கள்.

பெற்றோர்களுக்கு மிக பெரிய பங்கு இருக்கிறது. முதலில் தாங்கள் ஊடகங்களில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். இளைஞர்களை விளையாட வைக்க வேண்டும். யோகம், உடற்பயிற்சி, பொழுது போக்கிற்கான இசை, ஓவியம், நாட்டியம், கலைகள் போன்ற ஆற்றலை வளர்த்து கொள்வது , எது மெய்? எது பொய்?, யார் உதவுவார்கள்?, யார் உண்மையான நண்பர்? போன்றவற்றை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்,நன்றி மறவாமை பற்றி சொல்லி கொடுத்து வாழ்ந்து காட்ட வேண்டும்.

சில குடும்பங்களில் மிகுந்த ஊட்ட சத்தான(அளவிற்கு அதிகமாக) உணவுகளை கொடுத்து வளர்க்கும் காரணமும், குடும்ப மரபணு காரணங்களாலும் இந்த பருவம் அடைதல் மிக விரைவில் நடக்க வாய்ப்பு இருக்கிறது, pizza மற்றும் அதிக கொழுப்பு, அதிக பாலாடை கட்டி உணவுகளையே உண்டு வந்தால் விரைவில் பருவம் அடைதல், மாத விடாய் சுழற்சிகளில் மாற்றம் வரும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.