வீட்டிலேயே சத்து மாவு தயாரிப்பது எப்படி?

6 584

நவதானியங்கள் அடங்கிய சத்து மாவை வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கலாம். ஆரோக்கியமான சத்துமாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் : 

கம்பு – 100 கிராம்

ராகி – 100 கிராம்

கோதுமை – 100 கிராம்

பச்சஅரிசி – 100 கிராம்

உளுந்து – 100 கிராம்

பாசிப்பயறு – 100 கிராம்

கொள்ளு – 100 கிராம்

வேர்க்கடலை – 100 கிராம்

முந்திரி – 100 கிராம்

பாதாம் – 100 கிராம்

ஏலக்காய் – 10 கிராம்

ஜவ்வரிசி – 100 கிராம்

மக்காச் சோளம் – 100 கிராம்

கொண்டக்கடலை – 100 கிராம்

பொட்டுக்கடலை – 100 கிராம்

செய்முறை: 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தானியங்களையும் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும். பின்னர் ஒன்று சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அரைத்து வைத்துள்ள மாவை சிறிது ஆறவிட்டு நன்கு சலித்துக் கொள்ளவும். பின்னர் காற்று செல்லாத பாட்டிலில் கொட்டி வைத்து தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தலாம்.

You might also like
6 Comments
  1. கார்த்திகேயன் says

    அருமையான முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    1. Save Farming says

      nandri thala……….

  2. அமுதா says

    நற்பணிகள் தொடர என் வாழ்த்துக்கள்!

  3. Arun Kumar says

    Arumai Thambi Bandhan idhai romba ungakitta kaettukondirundhen mikka nandri

  4. Chandrasekar says

    தயார் செய்த சத்து மாவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் ? கஞ்சி போல காய்சி குடிக்க வேண்டுமா ?

  5. lokesh says

    1.5 age baby ku kodukalama, cold pidikum soldranga unmaiya?

Leave A Reply

Your email address will not be published.