வீட்டிலே மாதுளை நடுங்க பலன் அதிகம் வாஸ்து சரியில்லன சொல்றவன நம்பாதீங்க..!

0 184

வறட்சியை தாங்கி வளரக்கூடிய பழ பயிர்களில் முதன்மையானது மாதுளை. அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடிய குற்றுமர வகை. மாதுளைக்கு சத்துக்களும் சற்று கூடுதலாக தேவைப்படும்.

மாதுளையில் பல ரகங்கள் உள்ளன. இவற்றில் முத்துக்கள் அடர் சிவப்பு நிறத்தில் உள்ள இரகங்கள் பிரபலமானவை.

நடவு செய்யும்பொழுது செடிக்கு செடி இடைவெளி பத்து முதல் பன்னிரெண்டு அடி வரை இருக்கவேண்டும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட வயதுடைய பதியன் குச்சிகளை நடவு செய்யலாம். அரை அடி அகலம் மற்றும் ஒன்னரை அடி ஆழம் உடைய குழிகள் எடுத்து நடவு செய்வது சிறந்தது.

தயார் செய்த குழியில், நுன்னுயிர் உரம் கலந்த மண்புழு உரத்துடன் வேப்பம்புண்ணாக்கு மற்றும் சிறிது சுண்ணாம்பு தூள் கலந்து குச்சியை சுற்றி இடவேண்டும். மண் தன்மைக்குஏற்ப தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

மாதுளை துளிர்கள் வளரும் போது அனைத்தும் வளரவிடாமல் குறிப்பாக இரண்டு மற்றும் மூன்று துளிர் மட்டும் விட்டு மீதி கவாத்து செய்வதால் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

மூன்றாவது ஆண்டு இறுதியில் காய்ப்பு ஆரம்பிக்கும். பூக்கள் உதிராமல் தடுக்க மொட்டுகள் ஆரம்பிக்கும் போது சத்துக்கள் மற்றும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். நான்கு மாதம் கழித்துதான் பழுக்க ஆரம்பிக்கும்.

மாதுளையை அதிகமாக தாக்கும் நோய்கள் சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் பழ ஈக்கள். கற்பூரகரைசல் பூக்கள் தோன்ற ஆரம்பித்தது முதல் தெளித்தால் அளவுக்கு அதிகமாக பூக்கள் மற்றும் அனைத்து நோய்களையும் முற்றிலும் தடுக்கலாம். மாதுளை வருடத்தில் ஒரு முறை மட்டுமே காய்க்கும்.

மேம்படுத்தப்பட்ட சாணி கரைசல் வேரில் அளிப்பதன் மூலம் கரும் பச்சை நிற இலைகள் தோன்றும். திரட்சியான மற்றும் சுவையான பழங்கள் கிடைக்கும். மண்புழு உரம் மாதம் ஒருமுறை வேரில் இடலாம்.

மாதுளையில் காய்ப்பு முடிந்தவுடன் கவாத்து செய்ய வேண்டும். செடிகளின் அடி பகுதியில் தோன்றும் துளிர்களை வெட்டி விடவேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.