நீரிழிவு, ஆண்மை குறைவுக்கு சிறந்த மூலிகை தண்ணீர்விட்டான் கிழங்கு

0 714

இதன் அடிப்பகுதியில் நீண்ட கொத்தாக காணப்படும் தண்ணீர் விட்டான் கிழங்கு குளிர்ச்சி தன்மையும், இனிப்புசுவையும் கொண்டது. இது ஆண்மைக்குறைவு, நீரிழிவுக்கு சிறந்த மருந்தாகும்.

நீரிழிவைப் போக்கு நெடுநாட் சுரத்தையெலா
மூரைவிடுத் தோட வுறுக்குங்காண் – நாரியரே
வெண்ணீர்பெய் சோமநோய் வெட்டை யனற்றணிக்
தண்ணீர்விட் டான்கிழங்கு தான்

குணம்

தண்ணீர்விட்டான் கிழங்கு வெகுமூத்திரம், நீண்டநாள் சுரம்(காய்ச்சல்), சோமரோகம், வெள்ளை, உட்சூடு ஆகிய இவைகள் நீக்கும் என்க.

பயன்கள்

உலர்ந்த கிழங்கை இடித்து சூரணம் செய்து ஒருவேளைக்கு 5 கிராம் அளவு நெய், சர்க்கரை, பால் இவைகளில் இட்டு தினமும் 3 வேலை சாப்பிட நீர்க்கடுப்பு, எலும்புருக்கி, கைகால் எரிவு, தாதுபலவீனம், கரப்பான், நீண்டநாள் காய்ச்சல் முதலிய வியாதிகள் போம்.
பச்சைக்கிழங்கை இடித்து சாறு எடுத்து 1/2 அவுன்ஸ் வீதம் பாலில் கலந்து கொடுக்க தேக புஷ்டி உண்டாகும்.
இது நீரிழிவுக்கு சிறந்த மருந்தாகும். மேலும் வேகவெட்டை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களையும் நீக்கும்.
ஆண்மை குறைவை நீக்கி தாதுவை பலப்படுத்தும் உடலுக்கு நல்ல வலிமையை தரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.