விந்துகட்டி என்றால் என்னவென்று தெரியுமா..? ஏன் இந்த பெயர் என்றாவது தெரியுமா..?

0 1,338

சாதாரணமாக வீடுகளில் தென்படும் முருங்கைமரத்தை, மருத்துவபொக்கிஷம் என்றேசொல்லவேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பலவகைகளில் மருந்தாகிறது.முருங்கைக்கீரை வாரம்இருமுறை சாப்பிட்டுவர உடல்சூடுதணியும்.

வெப்பத்தின்காரணமாக முடிஉதிர்வதுநிற்கும். முடிநீண்டுவளரும். நரைமுடிஅகலும்.தோல்வியாதிகள் நீங்கும். முருங்கைகீரையில் இரும்புச்சத்து, (iron)சுண்ணாம்புசத்து (calcium)கணிசமாகஉள்ளது. அந்தவகையில் முருங்கைக்கீரையின் பயன்களைப் பார்ப்போம்.

முருங்கைமரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.முருங்கைப்பூ மருத்துவகுணம் கொண்டது. முருங்கைகீரையை வேகவைத்து அதன் சாற்றைகுடித்துவந்தால் உடல்சூடுதணியும்.வெப்பத்தின் காரணமாகஉடலில் ஏற்படும்மலசிக்கல்நீங்கும்.

முருங்கைகாய்சத்துள்ளகாய்.உடலுக்கு நல்லவலிமையைக்கொடுக்கவல்லது. ஆதலால்இதை உண்டால் சிறுநீராகம் பலப்படும்தாதுவும்(sperm)பெருகும்.

எனவேதான்,இக்கீரைக்கு ‘விந்துகட்டி’என்றபெயரும் இருக்கிறது.கோழையைஅகற்றும்.

முருங்கைஇலையை உருவிகாம்புகளை நறுக்கிவிட்டு பின் மிளகுரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டுவந்தால் கை,கால் உடம்பின் வலிகள்யாவும் நீங்கும்.முருங்கை இலைகளில்இரும்பு,தாமிரம்,சுண்ணாம்புச்சத்து ஆகியவை இருக்கின்றன.

இந்தஇலைகளை நெய்யில்வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை உள்ளவர்களின் உடம்பில் நல்லரத்தம் ஊறும் பல்கெட்டிப்படும்.முடிநீண்டுவளரும்.நரைமுடிகுறையும்.தோல்வியாதிகள் நீங்கும்.கடுமையானரத்தசீதபேதி,வயிற்றுப்புண்,தலைவலி,வாய்ப்புண்ஆகியவியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்காய் கைகண்டமருந்து.

முருங்கைக்காய் சாம்பார்எல்லோருக்கும் பிடித்தமானதே.இந்தசாம்பார் சுவையானதாகமட்டும் இருந்துவிடாமல்மலச்சிக்கல்,வயிற்றுப்புண்,கண்நோய்ஆகியவற்றுக்கு மருந்தாகவும்பயன்படுகிறது.

வாரத்தில் ஒருமுறையோ இரண்டுமுறையோமுருங்கைகாயை உணவாகஉபயோகித்தால்,ரத்தமும்சிறுநீரும்சுத்திஅடைகின்றன.வாய்ப்புண் வராதபடிபாதுகாப்புஉண்டாகிறது.முருங்கைக்காய்சூப்காய்ச்சல்,மூட்டுவலியையும்

போக்கவல்லது.

கர்ப்பப்பையின்குறைகளைபோக்கிகருத்தரிபதைஊக்குவிக்கும்.பிரசவத்தைதுரிதப்படுத்தும்.இதன் இலையைகொண்டுதயாரிக்கப்படும்பதார்த்தம்,தாய்ப்பால்சுரப்பதை அதிகப்படுத்தும்.

ஆஸ்துமா,மார்புசளி,போன்றசுவாசக்கோளாறுகளுக்குமுருங்கைகீரைசூப்நல்லது.ஆண்,பெண்இருபாலரின்மலட்டுத்தன்மையை அகற்றும்.முருங்கைஇலைஇரத்தவிருத்திக்குநல்லஉணவு.

வைட்டமின்கள் :
முருங்கைஇலை 100கிராமில் 92கலோரிஉள்ளது.
ஈரபதம் – 75.9%
புரதம் – 6.7%
கொழுப்பு – 1.7%
தாதுக்கள் – 2.3%
கார்போஹைட்ரேட்கள் – 12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம் – 440மி.கி
பாஸ்பரஸ் – 70மி.கி
அயம் (Iron)- 7மி.கி
வைட்டமின்சி 220மி.கி
வைட்டமின்பிகாம்ப்ளக்ஸ்

பச்சைக்கீரைகளில்எவ்வளவோஎண்ணிலடங்காபயன்கள்இருக்கின்றன.நாம்தான்அதனைமுறையாகப்பயன்படுத்துவதில்லை.கீரைவகைகளைஉணவோடுசேர்க்கச்சொல்லிசும்மாவாசொன்னார்கள்நம்பாட்டிமார்கள்.

-டாக்டர்.ஆர்.பாரத்குமார், BHMS.,MD. ,மதுரை

You might also like

Leave A Reply

Your email address will not be published.