உணவு முறை சரியா..?முக்கிய குறிப்பு _ மருந்தாக உணவை உண்ண வேண்டாம்..!

0 262

முன்னோர்கள் இயல்பாகவே இதனை எடுத்து வந்தனர் வயல்வெளிகளில்..

காலை கஞ்சி,கூழ் குடித்து.. இடையில் கிடைத்த கோவை, அழிஞ்சில் ,சூரை, இலந்தை,கொடுக்காப்புலி,நெல்லி, கலா பழம் போன்ற பழங்களை உண்டு வந்தனர் .

ஆகையால், சிறிது சிறிதாக உண்டு இடையில் ஆரோக்கியமான விலை குறைவான நாட்டு பழங்களை உண்ணவும் அல்ல மரம் வளர்க்கவும்.

கோடையில் பழையக்கஞ்சி , கம்மங்கூழையும், குளிர்காலத்தில் சிறு தாணியங்களையும் மறக்கமால் எடுத்து கொள்ளுங்கள்.

சிலர்கூறுவர் சிறுதானியமே பிரதான உணவாக இருந்தது… என ஆனால், அதீத சிறுதாணியம் உடல் சூட்டை அதிகரிக்கும்…

கம்பு, கேழ்வரகு, அரிசி குருணை போட்டே கூழினை செய்வர், காரணம்.. வெறும் கூழ் குளிர்ச்சியை தந்து சோர்வை உண்டாக்கும்.

உணவில் அறுசுவை யான இனிப்பு ,புளிப்பு ,உவர்ப்பு ,கசப்பு ,காரம் ,உவர்ப்பு ,இவைகளை முறையாக சேர்த்து கொள்வது மற்றும் தைராய்டு பிரச்னை ஒரு நோய் என்றாலும் குறிப்பாக பெண்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளதாக தெரிகிறது வைட்டமீன் &கால்சியம் சத்து குறைவே யாகும் .வெயில் வெப்பம் உடம்பில் படாமல் இருப்பதும் கீரை வஸ்துக்கள் பாவிக்காததும் என கூறுவது சரியான காரணமாக தெரிகிறது

நம் பெண்கள் சிறிது நேரம் வெயில் படும்படி இருப்பதும் கீரை வகைகள் சாப்பிடுவதும் சரியான தீர்வாகும் .

சுக பிரசவத்திற்கும் வழி வகுக்கும். .

அறுசுவை – பயன்கள்.

அறுசுவை – துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவையே ஆறு வகைச் சுவை.

நம் உடல் ஆரோக்கியத்திற்கு அறுசுவையும் சம அளவில் தேவை. அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடும் போது தான் உடலில் பிரச்னைகள் ஏற்படுகிறது .

அறுசுவைக்கும் நம் உணவில் இடம் கொடுத்து அதன்மூலம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி வகுத்துக்கொள்வோம்.

இதன் பலன்கள் –

இனிப்பு – தசையை வளர்க்கின்றது

மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.
இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

பழவகைகள், உருளைக் கிழங்கு, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு – கொழுப்பினை வழங்குகின்றது

உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

கார்ப்பு – எலும்புகளை வளர்க்கின்றது

உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.