ஒரு கதை சொல்லட்டுமா சார்……! கியூபா, கியூபா-ன்னு ஒரு நாடு இருந்துச்சாம்..!

0 1,743

ஒரு கதை சொல்லட்டுமா சார்……!
கியூபா, கியூபா-ன்னு ஒரு நாடு!

அமெரிக்கா வுக்கு கீழே ஒரு ஓரமா துக்குணூன்டா இருக்கும் மேப்-ல அதேதான்

Oriental Fruits Factory என்ற ஓர் நிறுவனம் அந் நாட்டின் இயற்கை வளங்களை சுரண்டவும், நிலங்களை அபகரிக்கவும் அமெரிக்காவால் நியமிக்கப்பட்டது!

அவர்களும் அங்கே இருக்கும் கரும்பு, பழங்கள், உணவு தானியம் என அனைத்தையும் அள்ளி எடுத்து சென்று கொண்டே இருந்தனர்!

ஒரு நிலையில் ஒட்டு மொத்த நாடும் அமெரிக்காவின் பிடியில் இருக்கிறது என்பதை மக்கள் உணரும் போது தான் தாங்கள் அடிமையாக்கப் பட்டிருக்கிறோம் என்பதையே தெரிந்து கொண்டார்கள்!

அவர்கள் அதை தெரிந்து கொள்ளும் போது அவர்களுக்காக அதற்கு முன்பு பேசிய போராடிய வழக்கறிஞர் நாடு கடத்தப்பட்டு இருந்தார்!

பின்னாளில் அந்த வழக்கறிஞர் தன் தோழர்களோடு மெக்சிகோ -விலிருந்து கடல் மார்க்கமாக நாடு வந்து சேர்ந்து இரகசியமாக படை கட்டி எழுப்ப துவங்கியிருந்தார்!

அப்போது அங்கு தலைமை பதவியில் இருந்தவர் அமெரிக்கா வின் அடிமை “பாடிஸ்ட்டா”

நாடு திரும்பிய பின்னர்

அங்கே வாழ்ந்த பூர்வ குடிகள், பல நாட்களாக வாழும் தென் அமெரிக்கர்கள், வேலைக்காக அடிமையாக அமெரிக்க கம்பெனியால் அடிமையாக கொண்டு வரப் பட்ட ஆப்பிரிக்கர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு தன் படையை கட்டி அமெரிக்காவை எதிர்த்து நின்றார்!

இதில் குறிப்பாக;- வந்தேறி வராத ஏறி என்று

பிரித்து பார்த்து ஒதுக்கி வைக்கவில்லை!

அரசின் அடக்குமுறையால் ஏற்கனவே கோபத்தில் மக்களும் கை கோர்க்க……, பாடிஸ்ட்டா அரசு வீழ்ந்தது!

இறுதியாக அந்த வழக்கறிஞர் ஆட்சியை பிடித்தார்!

அவர்கள் மீது மீண்டும் அறிவிக்கப் படாத ஓர் நேரடி போரை தொடுத்தது அமெரிக்கா.!

தங்களின் திறமையால் மறைமுக கொரில்லா தாக்குதல் மூலம் அமெரிக்க படை வீரர்களை-யே
தோற்கடித்ததோடு……, அந்த வீரர்களை சிறையும் பிடித்தனர்!

திருடனுக்கு தேள் கொட்டியது போல் முழித்தது அமெரிக்கா!

சர்வதேச அளவில் பேசி வீரர்களை மீட்கவும் முடியாது! காரணம்,

நடத்தியது திருட்டுத் தனமான வேலை! 1500 வீரர்களை கொண்டு வீழ்த்தி விடலாம் என்று நினைத்தவர்கள் சிக்கி கொண்டனர்!

அந்த வழக்கறிஞர் தன் மருத்துவரும் ரிசர்வ் வங்கி தலைவருமான நண்பனை பேச வைத்தார் அமெரிக்காவிடம்!

52 மில்லியன் அமெரிக்க டாலர்களை நஷ்ட ஈடாக பெற்றுக் கொண்டு வீரர்களை திருப்பி அனுப்பியது கியூபா!

அந்த வழக்கறிஞர் – ஃபிடல் காஸ்ட்ரோ

அந்த மருத்துவர் – சே குவேரா

அங்கு பாடிஸ்ட்டா – இங்கு எடப்பாடியும், மோடியும்!

அங்கே Oriental Fruits – இங்கு கார்ப்பரேட்கள்

கடைசி முதலாளி அங்கும் இங்கும் அமெரிக்கா தான்!

பிடலும், சேகுவேராவும் கண்டிப்பாக போராளி இயக்கங்களும் பொது மக்கங்களுமே!

இதில் அங்கும் இங்கும், எங்குமே தேர்தல் கட்சிகள் வந்ததில்லை! வரப் போவதுமில்லை!

பதிவு : பிறை கண்ணன்

#protest #Revolution #Fidal
#CHE #TamilNadu #சேகுவேரா

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.