உண்மையாகவே முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவானா..?

0 291

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்’ – இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் தங்களது வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.

ஏனெனில் முருங்கை மரத்தை நட்டு விட்டு, ஓட்டாண்டியாகி விடக் கூடாது என்று எண்ணி தான் முருங்கை நடுவதை தவிர்கிறார்கள்.

இதற்கு உண்மையான அர்த்தம் என்ன?
ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை. முருங்கை இலை, உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக் கொள்ள கூடிய மூலிகை.

இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார்கள்.

இதைத்தான் நம் முன்னோர்கள் “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்” என்று சொல்லி வைத்தார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.