பொதுநலன்

கணினி பயன்படுத்துவோர் கட்டாயம் பின்பற்றவும்!

By பாரதி

June 24, 2018

பொதுவாக நாம் எல்லாவற்றையும் படிப்போம்,பார்ப்போம்,அறிவோம் ஆனாலும் அதை நடைமுறையில் கடைப்பிடிப்பதில்லை.

கணினி என்றதும் உடன் நமது நினைவிற்கு வருவது எல்லாவற்றையும் விட நமது கண்கள் தான்.கணினித் திரையும்,தொடர்ந்து கணினியை பார்ப்பதும் கண்களுக்கு மட்டுமல்ல கழுத்து,தோள்,முதுகு வலி மட்டுமல்ல உளவியல் பிரச்சனைகளையும் தந்து விடுகிறது.

சிலர் கண் பார்வையை இழந்தும் உள்ளனர். முக்கியமாக கணினித் திரையின் ஒளி,அதில் இருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சு பற்றி கவனம் செலுத்துவது நல்லதாகும்.

தலைவலி,கண் எரிவு,கண் களைப்படைதல்,மங்கலாக தெரிதல்,உற்றுப் பார்த்தல் போன்றவை ஏற்படுகிறது.

கணினி பார்ப்பதால் கண்ணில் ஏற்படும் கோளாறுகளை, (Computer Vision Syndrome – CVS) என்கிறார்கள்.இது ஒரு குறிப்பிட்ட ஒரு நோய் என்று சொல்ல முடியாது.

தவறான முறையில் கண்ணைப் பாவிப்பதால்,eyestrain ,வலி ஏற்பட்டு கண்களை தாக்குவதால் இப்படி சொல்லப்படுகிறது.

திரை 18 – 28 அங்குல தூரத்திலும், சிறிது கண் உயரத்தில் இருந்து தாழ்வாகவும்(திரையின் நடுப் பகுதியில் இருந்து 4-9 அங்குலம் வரை) இருப்பது சிறந்தது.

கண் தசைகளுக்கும் கண்களுக்கும் ஓய்வு கொடுக்க 20-20-20 (RULE) முறையை பயன்படுத்தலாம்…

20 நிமிடம் தொடர்ந்து கணினியை பார்க்கும் நீங்கள் கண்ணை வேறுப்பக்கம் திருப்பி 20 அடி தூரத்தில் உள்ள வேறு ஒரு பொருளைப் 20 நொடி (அரை நிமிடம்) பாருங்கள். அல்லது கணினியைப் பார்க்காமல் 30 நொடி அமைதியாய் இருங்கள். மீண்டும் கணினியைப் பாருங்கள்.

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 5 நிமிட நேரம் எழுந்து சற்று தூரம் நடந்து பின் மீண்டும் அமர்ந்து வேலை செய்யுங்கள். தொடர்ந்து பலமணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது பல நோய்களை உருவாக்கும்.

பப்பாளி, மாதுளை, வாழைப்பழம், காலிப்பிளவர், பொன்னாங்கன்னி கீரை, மீன் இவற்றைத் தவறாது சாப்பிடுங்கள். ஆட்டுக்கறி அளவோடு வாரம் ஒருமுறை சாப்பிடுங்கள் கோழிகறி அறவே சாப்பிடாதீர்கள்.

மோரில் ஊறவைத்த வெள்ளறிப்பிஞ்சு தினம் சாப்பிடுங்கள்.

சோற்றுக்கற்றாழை சோற்றை எடுத்து அதை ஏழுமுறை அலசி, அதனுடன் தேன் சேர்த்து வாரம் மூன்றுமுறை சாப்பிடுங்கள்.

இவற்றைச் செய்தால் கண் கெடாது; மூல நோய் வராது. உடல் நலம் காப்பாற்றப்படும்.

ஒருநாளைக்கு 7மணி நேரம் கட்டாயம் உறங்க வேண்டும். எண்ணெய்த் தேக்கும் பழக்கம் இருப்பின் வாரம் ஒருமுறை விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தலைக்குத் தேய்த்து சிகைக்காய்தூள் தேய்த்து குளியுங்கள்!

உங்கள் உடல் நலம் காப்பாற்றப்படும்!