பாரம்பரியம்

ஏலே இனி வேப்பம் பழம் பருவம் இதெல்லாம் மிஸ் பண்ணிடாதலே..!

By பாரதி

June 20, 2018

இவை யாரும் சாப்பிடுவது இல்லை. வேப்பம் பழம் மஞ்சள் நிறமாக இருக்கும். சிறியதாக இருக்கும். இந்த பழத்தை காகம், குயில், மைனா, குருவிக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும்.

சாப்பிட்ட பின் அதன் எச்சம் எங்கு விழுகிறதோ அந்த இடத்தில் வேப்ப மரம் முளைக்கும். வேப்பமரம் இனிப்பு, கசப்பு, சுவையில் இருக்கும். இந்த பழம் சுவைத்து சாப்பிட்டு கொட்டையை துப்பிவிடவும். இந்த பழம் சாப்பிட குடலில் உள்ள புச்சிகள் வெளியாகும்.

சர்க்கரை நோய் கட்டுப்படும். சிறுநீரகத்தில் கிருமி இருக்காது. இதில் ஒரு கொட்டை, ஏழு நாட்கள் அரைத்து சாப்பிட மாதவிடாய் வலி குறையும். இந்த விதை அரைத்து தாய்பாலில் கலந்து நெற்றியில் பற்றுபோட தலைவலி நீங்கும்.

தலையில் தடவி குளிக்க சன்னி வராது. வேப்பம் பிசின், பட்டை, இலை இவை எல்லாம் பல மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. வேப்பம் குச்சி கொண்டு பல் துலக்க, பல் ஈறுகள் பலமாகும். மலச்சிக்கல் இருக்காது. மலகுடலில் உள்ள அரிப்பு மாறும்.

சிறுபுச்சிகள் அழியும். சிறுகுழந்தைகள் அரிப்பு தாங்காமல் அழும் போது ஆசன வாயில் வேப்ப எண்ணெய் தடவ உடனே குணம் ஆகும். அம்மை போட்டவர்களுக்கு வேப்ப இலையில் படுக்க வைக்க சீக்கிரம் குணம் ஆகும்.

வீட்டு வாசலில் வேப்பம் இலையை கட்டி தோரணம் தொங்க விட எந்த கிருமியும் வீட்டுக்குள் வராது. வேப்ப மரத்தடியில் படுத்த உறங்க நல்ல ஆரோக்கியம் அதிகம் உண்டாகும். தோல் நோய் தீரும்.

குழந்தைகளுக்கு கக்குவான் இருமல் வாந்தி, ஏற்பட்ட நேரம் வேப்ப இலை கொண்டு, குழந்தை உடலில் 18 முறை தடவி எடுக்க அந்த கக்குவான் இருமல் குணம் ஆகும். அம்மை காலத்தில் அம்மை தடுக்க வேப்பம் இலை, துளசி இலை, மஞ்சள் இவை மூன்றும் சம அளவு சாப்பிட அம்மை வராது. குறைந்தது5 கிராம் அளவு.

வேப்பமரத்தை தமிழ் நாட்டு மக்கள் தெய்வமாக வழிபடுவார்கள். அம்மனுக்கு உகந்த மரம் வேப்பமரம். அதனால் வேப்ப இலையை அம்மன்காப்பு என்பார்கள். தாய், தன் மகனை எப்படி காப்பது போல் வேப்ப மரம் மக்களை காப்பாற்றும்.

ஆறாத புண் மிது வேப்பிலை தடவி வர சீக்கிரம் ஆறும். வேப்ப பூ சாப்பிட இதயம் பலம் ஆகும். கொழுப்பு கரையும். உடலில் உல்ள அரிப்பு குறையும், தோல் நோய் நன்றாகும்.