சமூக விழிப்புணர்வு

போராட்டமோ , குண்டுகளோ இல்லாமலே மக்கள் கொத்து கொத்தாய் மடிய நேரிடும்..!

By பாரதி

June 20, 2018

அன்பு தமிழக ஆட்சிக்கார்,

தமிழகத்தில் அதிக வரி வருவாய் மற்றும் தமிழக GDP யில் முக்கிய பங்கு வகிக்கும் , 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் திருப்பூர் மாநகரத்தில் கடந்த சில மாதங்களாக குப்பைகளை அள்ளுவதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது,.

எந்த வீதியில் சென்றாலும், பிரதான சாலைகளில் சென்றாலும் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளதை காணமுடியும், இதனால் நோய் தொற்றுகள், காற்று மாசு உள்ளிட்ட கடும் சிரமங்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.

எந்நேரமும் வெளிநாட்டு வர்த்தகர்கள் இங்கே வந்த வண்ணம் உள்ளதை தாங்கள் அறிவீர்கள், ஆடை தயாரிப்பில் தரம் மட்டுமல்ல அது தயாரிக்கும் இடத்தின் தரங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வர்த்தகம் செய்யும் நிலை உள்ளதால் இது மக்களின் சுகாதாரம் மட்டுமல்ல வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் நிலை ஏற்படும் உடனடியாக மற்றும் தொடர்ந்து சுத்தம் செய்து சுத்தமான திருப்பூராக வைத்துக்கொள்ள உதவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

திருப்பூர் வாழ் குடிமகன் மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு வரிகளை அரசுக்கு செலுத்தும் அடிப்படையில் அந்த உரிமையிலும் சுய சிந்தனையுடன் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் இதை பதிவிடுகிறேன்

போராட்டமோ , குண்டுகளோ இல்லாமலே பல்வேறு தொற்று நோய்களால் மக்கள் மடிய நேரிடும் ஆகவே பல்வேறு பணி சுமைகளின் இடையே இதையும் தாங்கள் கவனிக்க வேண்டுகிறேன்

பதிவு: Kumar Duraiswamy