சமூக விழிப்புணர்வு

கலப்படமில்லாத தேங்காய் பருப்புகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்களில் நறுமணங்கள் வருமா..?

By பாரதி

June 13, 2018

உண்மையான தேங்காய் எண்ணெயின் வாசத்தை நீங்கள் அறிவீர்களா..? நிச்சயம் வாய்ப்பில்லை என்பது தெரியும் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒரே ஒருமுறை முகர்ந்து பாருங்கள்

உங்களுக்கே தெரியும் கடையில் விற்கப்படும் அனைத்து தேங்காய் எண்ணெயிலும் கலப்படம் செய்யப்பட்டுள்ளது

இதில் எந்த ஒரு நிறுவனமும் விதிவிலக்கு அல்ல கிராமத்தில் பெரிதும் உணவுப் பொருட்களிலும் சரி அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களிலும் சரி அதிகம் பயன்படுத்தும் வார்த்தையாக சிக்கு மனம் வீசுகிறது என்று பலரும் சொல்லக் கேட்டு இருப்பீர்கள்

அது வேற எதுவும் அல்ல எண்ணைகளும் சரி உணவு பொருட்களிலும் சரி நாட்கள் செல்லச் செல்ல அதன் மனம் மாற ஆரம்பிக்கும் அதுவே துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்

சரி உண்மையான தேங்காய் எண்ணெயின் மனம் தான் என்ன வாருங்கள் பார்ப்போம் நிச்சயம் உங்களை செக்கு ஆலைகளுக்கு செல்ல சொன்னால் சிலருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை இருந்தாலும் வீட்டிலேயே இருந்தபடி உண்மையான தேங்காய் எண்ணெயின் மனத்தை அறியலாம்..!

கடைகளில் விற்கப்படும் முழுதேங்காய் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள் பின்பு அதனை உடைத்து வெயிலில் நன்றாக காய வையுங்கள் இரண்டு மூன்று நாட்கள் நன்றாக வெயிலில் காய்ந்த உடன் கையில் எடுத்தீர்கள் என்றால் அதிலிருந்து ஒரு மணம் வீசும் அதுதான் தேங்காய் எண்ணெய் உண்மையான மனம்

இதை எப்படி நம்புவது என்றால் அந்த காய்ந்த தேங்காயை சிறு துண்டை வாயில் வைத்து தின்று பாருங்கள் அதிலிருந்து வரும் எண்ணெயின் மனம் உங்கள் மூக்கை துளைக்கும்

சுத்தமான தேங்காய் எண்ணை என்று இங்கு நீங்கள் கடைகளில் வாங்கும் அனைத்து எண்ணெய் பொருட்களும் நறுமணத்திற்காக சில வேதிப்பொருள் கலக்கப்படுகிறது இதை நிரூபிக்கவே இப்பதிவு

பொதுநலன் கருதி வெளியிடுவோர்