அது எப்படிய்யா, கல் தோன்றி, மண் தோன்றா முன்னரே, தமிழ் தோன்றும்.? என்று கேட்கும் விஞ்ஞானிகளே..?

2,506

நிறையப் பேரு மேடையில் பேசக் கேட்டிருப்பீங்க..

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி!”

அது எப்படிய்யா, கல் தோன்றி, மண் தோன்றா முன்னரே, தமிழ் தோன்றும்?
பூமி-ன்னு ஒன்னு தோன்றி, மக்கள் தோன்றி, அப்பறம் தானே-ய்யா மொழியே தோன்றும்? என்னய்யா “பகுத்தறிவு”?

கல் தோன்றி, மண் தோன்றா” இந்த வரியின் உண்மைகளைப் பார்ப்போமா?
இந்தப் பாடல் முழுக்கத் தெரியுமா?
“முழுமை” அறிந்தால் தானே “உண்மை”யும் அறிய முடியும்?

பாடலை பார்ப்போம்..

“பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் – கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!”

புறப்பொருள் வெண்பா மாலை(புற இலக்கண நூல்)

கல்/மண் தோன்றும் முன்னரே, தமிழ் தோன்றி விட்டது!
அப்படியா சொல்கிறது இந்தப் பாடல்?

கல் = மலை என்ற பொருளும் உண்டு!
கல் உயர் தோள், கிள்ளி பரி = மலை போன்ற உயரமான தோள் உடைய கிள்ளிச் சோழன்
(எ.கா) கல் இயங்கு கருங் குற மங்கையர் = மலையில் இயங்கும் கருப்பு நிறக் குறத்திப் பெண்கள்

மண் = வயல் என்ற பொருளும் உண்டு!
மணிநீரும் “மண்ணும்” மலையும் அணிநீழற்
காடும் உடையது அரண் (குறள்)
(எ.கா) மண் வளம் -ன்னு சொல்றோம்-ல்ல? பச்சை மண்ணு!

இப்போ, கூட்டிக் கழிச்சிப் பாருங்க!

கல் தோன்றி = மலை தோன்றி
மண் தோன்றா = வயல் தோன்றா

முல்லை/குறிஞ்சி தோன்றி,
மருதம் தோன்றாக் காலத்தே..
கையில் வேல்-வில்-வாளோடு, முன்பு இருந்த ஆதி குடிகள்!

வயல் வெளி நாகரிகம் தோன்றாக் காலத்தே..
காடும்/மலையும் தானே ஆதி மனிதன்?
அவன் கையில் கல்/ எஃகு/ இரும்பால் ஆன வேலும் வாளும் (Natural Evolution Process)

வாளோடு முன் தோன்றி” இந்த வரியின் உண்மைய பார்ப்போம்..

தோன்றுதல்” -னா பிறத்தல்-னு மட்டும் பொருள் அல்ல! கையில் வாளைப் புடிச்சிக்கிட்டே,
தமிழ்க் குழந்தை பொறக்குமா என்ன?

தோன்றிற் புகழொடு தோன்றுக – அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று (குறள்)
தோன்றிற் புகழொடு தோன்றுக = Appear on the Stage, with Glory

தோன்றல்= Appearance!
முல்லை/குறிஞ்சி தோன்றி,
மருதம் தோன்றாக் காலத்தே..
கையில் வாளோடு Appear ஆன ஆதி குடிகள்!

வையகம், நீர் போர்த்தி இருந்து, பின்பு வாழ்வு துவங்கிற்று!
அப்போ, மலை வாழ்வு/ காட்டு வாழ்வு தான் முதல்!
கல் தோன்றி = மலை தோன்றி
மண் தோன்றா = வயல்கள் தோன்றா

முல்லை/ குறிஞ்சி தோன்றி, மருதம் தோன்றாக் காலத்தே…
கையில், வாளோடு, Appear ஆகி(தோன்றி),
இப்படி வீரமாகப் போர் செய்து, ஆநிரை காக்கிறார்களே,

இந்தக் கரந்தைத் திணையில்! வாழ்க ஆதி குடிகள்!

கல் தோன்றி, மண் தோன்றா =கப்சா அல்ல!

சங்கத் தமிழ் நெறி! Natural Evolution! அறிவீர், அறிவீர்!

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.