மருத்துவகுறிப்பு

ஹேர் டையை நீண்ட காலமாக பயன்படுத்துபவரா நீங்கள்? இதனை படியுங்கள்..!

By பாரதி

June 02, 2018

நரைமுடியை கருநிறமாக மாற்ற பயன்படுத்தப்படும் Hair Dye-யினால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு அலர்ஜியை உண்டாக்கும்.

இதன் அறிகுறிகளாக தலையில் அரிப்பு, எரிச்சல், கண் இமைகள், காது, முகம், கழுத்து ஆகிய பகுதிகள் சிவந்து போவது, முகம் வீங்குவது ஆகியவை ஏற்படும்.

இந்த அலர்ஜியானது ஒரு வாரம் வரையிலும் நீடிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அலர்ஜி ஏற்படும்போது செய்ய வேண்டிய அடிப்படை விடயங்கள் குறித்து இங்கு காண்போம்.

எலுமிச்சை சாறு

ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் நான்கு தேக்கரண்டி அளவு தயிர் எடுத்து கலந்துகொண்டு, அலர்ஜி பாதித்த இடங்களில் தடவ வேண்டும். அத்துடன், தலை முழுவதும் Hair pack-யை போட வேண்டும்.

அதன் பிறகு அரைமணி நேரம் ஊற வைத்து, காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதன் பின்னர், Shampoo போட்டு தலைமுடியை அலச வேண்டும்.

வாரத்தில் இரண்டு முறை இதனை செய்திட, எலுமிச்சை சாற்றில் அதிகப்படியான ஆண்டிசெப்டிக் மற்றும் ஆஸ்டினரிங்கெண்ட் துகள்கள் தயிருடன் சேர்ந்து அலர்ஜியை கட்டுப்படுத்தும்.

ஜோஜோபோ எண்ணெய்

ஜோஜோபோ எண்ணெய்யை தேவையான அளவு ஒரு Cup-யில் எடுத்துக் கொண்டு, லேசாக சூடுபடுத்தி இரவினில் தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

இதன்மூலம் அலர்ஜியினால் ஏற்பட்ட அரிப்பு, வீக்கம், சிவந்து போகுதல் போன்றவை குறையும்.

கற்றாழை சாறு

கற்றாழை சாற்றை எடுத்துக் கொண்டு, அதனை தலை முழுவதும் Apply செய்ய வேண்டும். மற்றும் அலர்ஜி ஏற்பட்டிருக்கும் பகுதிகளிலும் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் அப்படியே கழுவ வேண்டும்.

கற்றாழையில் குளிர்ச்சித்தன்மை உள்ளதால் தலை மற்றும் உடலில் எந்த பகுதியில் அலர்ஜி உண்டானாலும் அதனை சரி செய்யும்.

ஆப்பிள் சிட் வினிகர்

ஒரு Cup தண்ணீரில், ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சிட் வினிகரை கலந்து கொண்டு, தலைக்கு குளித்து முடித்தவுடன் கடைசியாக தலையின் அனைத்து பாகங்களிலும் ஊற்ற வேண்டும்.

இதன் பிறகு தண்ணீரை தலையில் ஊற்றாமல், Shampoo-வை பயன்படுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், இது தலைமுடிக்கு வறட்சியை ஏற்படுத்திவிடும்.

புதினா இலைகள்

ஒரு Cup அளவு தண்ணீரில், நிறைய புதினா இலைகளை சேர்த்து சுமார் பத்து நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் நிறம் அடர் பச்சையாக மாறினால், இலைகளில் இருக்கிற சாறு அத்தனையும் தண்ணீரில் கலந்துவிட்டதை அறிந்து கொள்ளலாம்.

பின்னர் இந்த நீரை தலை முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் வரை காத்திருந்து கழுவிட வேண்டும்.

ஆலிவ் எண்ணெய்

ஒரு Cup-யில் இரண்டு தேக்கரண்டி அளவு ஆலிவ் எண்ணெய்யை எடுத்துக் கொண்டு, லேசாக சூடுபடுத்தி அலர்ஜி ஏற்பட்டிருக்கும் இடங்களில் தடவி ஒரு மணி நேரம் கழித்து Shampoo பொட்டு கழுவிட வேண்டும். இவ்வாறு வாரத்தில் மூன்று நாட்கள் செய்ய வேண்டும்.

கிரீன் டீ

கிரீன் டீயை இனிப்பு இன்றி தயாரித்துக் கொள்ள வேண்டும். அதனை தலைக்கு குளித்து முடித்தவுடன் தலையில் ஊற்றி அலசிட வேண்டும்.

அதன் பிறகு மறுபடியும் தண்ணீர் ஊற்றி கழுவ தேவையில்லை. இதனை வாரத்தில் மூன்று நாட்கள் வரை செய்திட வேண்டும்.