நினைவு

குடிக்க தண்ணீர் இன்றி தடவ மருந்தின்றி… அரவணைப்பார் யாருமின்றி…! மாண்டது ஒர் இனம்

By பாரதி

May 18, 2018

மே…..18. தமிழின வரலாற்றில் மறக்கமுடியாத நாள் மட்டுமில்லை, மறக்கக்கூடாத நாள்…

ஆம், உறவுகளே…! 2009 ல் இதே நாளில் தான் வான்வெளி தாக்குதலாலும், கொத்துக்குண்டு தாக்குதலாலும், கை உடைந்து, கால் முறிந்து, மண்டை பிழந்து, குடல் சறிந்து குற்றுயிரும், குலையுயிறுமாக…

குடிக்க தண்ணீர் இன்றி .. தடவ மருந்தின்றி… அரவணைப்பார் யாருமின்றி… முள்ளிவாய்க்காலின் தெருக்களில் முக்கி, முனகிக்கிடந்த நம் உறவுகள் 40,000 க்கும் மேற்பட்டவர்களை டாங்கிகளையும், கனரக வாகனங்களையும் ஏற்றி கொன்றொழித்தான் சிங்களன்… இந்தியாவின் உதவியோடு….

கன்னிப் பெண்ணை கற்பழித்துக் கொண்றதை உலகம் கேள்விப் பட்டிருக்கிறது… ஆனால் .. உலகம் அறியாத ஒன்று கொன்று கற்பழித்ததை.. நமது தங்கை இசைப்பிரியாவை கொன்று, இறந்த பிணத்தை கற்பழித்தான் சிங்களன்….

அந்த பேரழிப்பு, பேரவலத்திற்குப் பின் இன்றும் அழிவின் விளிம்பில் நிறுத்தப் பட்டிருக்கிறது நம் இனம் ஈழத்தில்… மீட்டெடுக்கப் படாவிட்டால் அடுத்து ஐந்து, பத்தாண்டுகளில் நம் முற்றிலுமாக அழிக்கப்படும் என்பதே இன்றைய நிலை…

எழுவோம், எழுவோம்… இனம் காக்க எழுவோம்…

கண் முன்னே பார்த்தோம்… எப்படி நமது இனம்….. அகதிகளாய், ஏதுமற்ற ஏதிலிகளாய் ஆக்கப்பட்டனர் என்று… அங்கே பயன்படுத்தப் பட்டது ஆயுதம்… இங்கே பயன்படுத்தப் படுவது .. திட்டங்கள், பேரழிப்பு திட்டங்கள்…

எழுவோம், எழுவோம்.. இனம் காக்க எழுவோம்…

இன்று ஒருநாள் மற்ற பதிவுகளைத் தவிர்த்து இனம் அழித்த வரலாறை நினைவில் கொள்வோம்…

முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு எனது கண்ணீரஞ்சலி.. வீரவணக்கம்…