100 கதை க ளை கே ட்டு விட் டு வெ றும் 8 படத் தி ற்கு ம ட்டும் ச ம்ம தம் தெ ரிவித் த ந டி கர் ..!! தர மா ன நடி ப் பால் குவி யும் பட வா ய் ப் புகள் ..!! வெளி யா ன தக வல் இ தோ ..!! இ வரா என் று ஆச்சி ரிய மா ன ரசி க ர்க ள் ..!!

0 615

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு சில நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்திலேயே வாழ்ந்து  நடிப்பார்கள் . அப்படிப்பட்ட நடிகர்கள் தமிழ் சினிமாவின் ஏராளம் உண்டு .அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் குரு சோமசுந்தரம் . இவர் கடந்த 2011 ம் ஆண்டு இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய காண்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

பின்னர் இந்தப் படத்தைத் தொடர்ந்து கடல் ,பாண்டியநாடு ,ஜிகர்தண்டா, தூங்காவனம் போன்ற பல படங்களில் நடித்து வந்தாலும் இவரை ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமாக்கியது கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படம் தான் . தேசிய விருது வென்ற இந்த திரைப்படத்தில் நடிகர் குரு சோமசுந்தரத்தின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது .

இதனை தொடர்ந்து  பல படங்களில் நடித்து வந்த இவருக்கு மலையாள சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு அமைந்தது . அந்த வகையில் கடந்த ஆண்டு டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மின்னல் முரளி என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார் நடிகர் குரு சோமசுந்தரம் . இப்படி வெளியான இந்த திரைப்படம் அவருக்கு பல்வேறு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்ததோடு,

ஏகப்பட்ட படவாய்ப்புகளும் குவிந்து வருகிறது . அந்த வகையில் மலையாளத்தில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட கதைகளை கேட்டாராம் குரு சோமசுந்தரம் . அதில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள 8 கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளாராம் . இதைப் பற்றி பேசிய அவர் அந்த நூறு கதைகளும் மிகவும் சவாலான கதைகளாக இருந்தது .

அதில் எட்டு கதைகளை மட்டும் தேர்ந்தெடுப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது . மேலும் நான் தேர்ந்தெடுத்துள்ள அந்தக் கதைகள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் தான் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார் . மேலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது மலையாள சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் நடிகர் குரு சோமசுந்தரம் அவர்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.