17 வய திலே யே கர்ப் பமா ன பெ ண்ணா க நடி த்திரு க்கும் அஜித் தின் ரீல் ம கள்..!! இ ந்த வய திலே யே இப்ப டி யொ ரு கதாபா த்திர மா ..?? வெளி யா ன போ ஸ்ட ரை பார் த்து ஷாக் கா ன ரசி கர் க ள் ..!!

0 524

தமிழ் சினிமா உலகில் கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் என்னை அறிந்தால். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அனுஷ்கா, திரிஷா, அருண்விஜய் , விவேக் போன்ற பல பிரபலங்கள் நடித்து இருந்தனர் . இப்படி வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.  மேலும் இந்த படத்தில் அஜீத்தின் மகளாக நடித்து இருந்தவர் தான் அனிகா சுரேந்திரன் .

இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே பல மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . அதுமட்டுமல்லாமல் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகளையும் பல முறை வென்றுள்ளார் அனிகா . மேலும் என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து,

நானும் ரௌடி தான் , மிருதன் , விஸ்வாசம் , மாமனிதன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் அனிகா. இவர் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் அதிகம் நடித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனிகா .

அந்த படத்தின் பெயர் தான் வாசுவின் கர்ப்பிணிகள் . இப்படத்தை ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பென்சில்  என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் இயக்கியிருக்கிறார் .இந்த படத்தில் நீயா நானா கோபிநாத், வனிதா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இதில் 16 வயது முதல் 52 வயது வரை இருக்கும்,

நான்கு  பெண்கள் மற்றும் ஒரு டாக்டரை சுற்றிதான் இந்த படத்தின் கதையை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது .மேலும் 16 வயதான அனிகா சுரேந்திரன் இந்த படத்தில் கர்ப்பமான பெண்ணாக நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.