இய க்கு னர் லோ கே ஷ் க னகரா ஜின் அப் பா மற் றும் அம் மா வை பார் த்துள் ளீர்க ளா ..?? முத ல் முறை யா க வெ ளியா ன லேட் டஸ் ட் புகை ப்ப டம் ..!! ஷே ர் செ ய்து வ ரும் ரசி கர் க ள் ..!!

0 504

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு சில இயக்குனர்கள் குறிப்பிட்ட படங்களிலேயே ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விடுவார்கள். அந்தவகையில் பல முன்னணி இயக்குனர்களை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் ஆரம்ப காலகட்டங்களில் வங்கியில் பணிபுரிந்து வந்தார் . அப்போதே சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் குறும்படங்களை இயக்கி வந்துள்ளார் .அப்படி அவர் இயக்கிய களம் என்ற குறும்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இவருக்கு இயக்குனராகும் வாய்ப்பும் அமைந்தது . அந்தவகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக கால்தடம் பதித்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.இப்படி வெளியான முதல் படமே இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது .

பின்னர் ஒரு சில வருடங்கள் கழித்து கார்த்தி நடிப்பில் வெளியான கைதி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ்.  இந்த திரைப்படமும் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.பின்னர் நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் . இப்படி வெளியான திரைப்படத்தையும் ரசிகர்கள் கொண்டாடினர் .

மேலும் எந்த ஒரு இய்குனரிடமும் உதவி இயக்குனராக  பணியாற்றாமல் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தன்னுடைய திறமையால் இந்த அளவிற்கு முன்னேறி உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதுமட்டுமல்லாமல் இவர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் ஆவார் . மேலும் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படமும் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது . இப்படியொரு நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின்  அப்பா மற்றும் அம்மாவின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது .இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.