நடி கை ஸ்ரீ வித் யா வின் த ங் கை யா ரெ ன்று தெ ரியு மா ..?? அட, அவ ரு ம் ஒ ரு நடிகை தா னா ..?? இவ் வள வு நா ளா இ து தெரி யா ம போச் சே ..?? இணைய த்தி ல் வெ ளியா ன புகைப் பட ம் இ தோ ..!!

0 1,134

ஸ்ரீவித்யா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கடந்த 1967ஆம் ஆண்டு வெளியான திருவருட்செல்வர் என்ற படத்தில் நடன கலைஞராக அறிமுகமானார் .பின்னர் இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் . குறிப்பாக அபூர்வ ராகங்கள் ,டௌரி கல்யாணம், அம்மன் கோயில் கிழக்காலே, ஒரு தாயின் சபதம், மனிதன் போன்ற பல படங்களை கூறலாம்.மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல்,

தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் . அதுமட்டுமில்லாமல் நடித்த அனைத்து மொழிகளிலும் தன்னுடைய சொந்த குரலிலேயே பேசி நடித்து இருப்பார் என்பதும் ஆச்சரியமான ஒன்று.இப்படி தொடர்ந்து நடித்து வந்த இவர் ,

ஒரு கட்டத்தில் அம்மா கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் என்று தொடர்ந்து நடித்து வந்தார். இதனிடையே கடந்த 2006ஆம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு தன்னுடைய 53 வது வயதில் உயிரிழந்தார் நடிகை ஸ்ரீ வித்யா.இவர் கடைசியாக தமிழில் பிரசாந்த் நடிப்பில்,

வெளியான லண்டன்  என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் நடிகை ஸ்ரீ வித்யாவிற்கு பிரவீனா என்ற தங்கையும் இருக்கிறார் . இவர் வேறு யாருமில்லை தீரன் அதிகாரம் ஒன்று ,சாமி 2,கோமாளி போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தவர் தான்.

அதுமட்டுமில்லாமல் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி2 என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரவீணா. இந்நிலையில் நடிகை ஸ்ரீவித்யா மற்றும் பிரவீனா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.