விஜ ய் சேது பதி யை பார்த் தா லே என க்கு திட் டனு ம் போ ல இரு க்கு ..!! பொ து இட த்தில் வெளி ப்ப டை யாக கூறி ய பிரப ல நடி கை ..!! இணை யத் தை கல க்கும் வீடி யோ பதி வு இ தோ ..!!

0 458

நடிகர் விஜய்சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் . மேலும் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்தவர் தற்போது வில்லன் கதாபாத்திரத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.  இதை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதி . இப்படி வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

அது மட்டுமில்லாமல் நடிகர் சூர்யா ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றார் . இந்நிலையில் நேற்று வெளியான இந்த திரைப்படத்தை பல சினிமா பிரபலங்கள் பார்த்துவிட்டு தங்களின் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர் .

அப்போது நடிகை குஷ்புவும் தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்திருந்தார் . அதில் அவர் கூறியதாவது, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படத்தை பார்த்து விட்டு வீட்டுக்கு செல்கிறேன் என்று திருப்தி கிடைத்திருக்கிறது . உலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதை மீண்டும் ,

நிரூபித்து விட்டார் கமல்ஹாசன் அவர்கள் . மேலும் அவரின் தீவிர விசிறி நான் . அதோடு நடிகர்  பகத் பாசில் தன்னுடைய இயற்கையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் . அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதியை பார்த்தாலே எனக்கு திட்டனும் போல இருக்கு .

அந்த அளவிற்கு வில்லத்தனத்தில் அசத்தியிருந்தார் விஜய் சேதுபதி .குறிப்பாக இயக்குனர்  லோகேஷ் கனகராஜ்  ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தை செதுக்கியிருக்கிறார் என்றும் கூறியிருந்தார் நடிகை குஷ்பூ .இந்நிலையில் நடிகை குஷ்பு பேசிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.