இந் த நடிக ருட ன் எத் த னை மு றை வே ண்டு மானா லும் நா ன் ப டம் இயக் குவத ற்கு தயா ர் ..!! வெளி ப்ப டையா க போடு டைத் த இய க்கு னர் லோ கேஷ் கன கரா ஜ் ..!! இவ ரா எ ன்று ஆச் சிரிய மடை ந்த ர சி கர்க ள் ..!!

0 293

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் . இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியைக் கண்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . பின்னர் இதனை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் .

இந்த திரைப்படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இதையடுத்து இவருக்கு விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு அமைந்தது . அந்த வகையில் வெளியான மாஸ்டர் திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதையடுத்து உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் .

இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் ,நரேன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . அதுமட்டுமல்லாமல் நடிகர் சூர்யாவும் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக பல வருடங்கள் கழித்து வெளியான கமலின் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்று கூட சொல்லலாம் . இந்நிலையில் சமீபத்தில் பேட்டியொன்றை  கொடுத்து இருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . அதில் பல தகவல்களையும் கூறியிருந்தார் . அப்போது நீங்கள் நடிகர் விஜய்யை வைத்து படங்களை இயக்குவீர்களா என்று கேட்டதற்கு,

தளபதி 67 படத்தை நான் தான் இயக்க உள்ளேன் . அது மட்டுமல்லாமல் அவருடன் நான் எத்தனை தடவை வேண்டுமானாலும் இணைந்து படம் இயக்குவதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ் அவர்கள் . இப்படி வெளியான இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.