வெற் றிக் காக தன் னு டைய ப ழை ய யு த்தி யை கையி லெ டுத்த கம ல் ..!! விக் ரம் படத் தில் செய் திரு க்கும் தர மா ன சம் ப வம் ..!! அப் படி எ ன்ன செ ய்தா ர் தெ ரியு மா ..?? இ ணைய த் தை கல க் கும் தக வ ல் ..!!

0 227

தமிழ் சினிமா உலகில் உலக நாயகனாக ஜொலித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் . இவர் தன்னுடைய படங்கள் மூலம் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வைத்ததோடு பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.  இப்படி ஆரம்பத்திலிருந்து சினிமாவை ரசித்து அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி வருகிறார் கமல்.  குறிப்பாக கமல்ஹாசன் தன்னுடைய படங்களில் அப்போது பிரபல நடிகர்களாக இருந்த,

நடிகர்களை நடிக்க வைத்து சாதித்து காட்டியவர் . அந்த வகையில் 1995 ம் ஆண்டு வெளியான குருதிப்புனல் படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க வைத்திருப்பார் கமல் . இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இதைத் தொடர்ந்து கடந்த 1998ஆம் ஆண்டு காதலா காதலா திரைப்படத்தில் அப்போது நடனத்திலும்,

நடிப்பிலும் பிரபலமாக இருந்த பிரபுதேவாவை தன்னுடன் இணைந்து நடிக்க வைத்து ஹிட் கொடுத்திருந்தார் கமல் . இதன்பிறகு கடந்த 2000ம் ஆண்டு வெளியான தெனாலி படத்தில் அப்போது தமிழ் ரசிகர்களிடையே  பிரபலமாக இருந்த ஜெயராமை நடிக்க வைத்திருந்தார் கமல்ஹாசன்.

அதுமட்டுமில்லாமல் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான அன்பே சிவம் படத்தில் அப்போது சாக்லேட் பாயாக இருந்து வந்த நடிகர் மாதவனை நடிக்க வைத்திருந்தார் . இப்படி பல ஹிட் படங்களை  கொடுத்த கமல்ஹாசன் தற்போது தன்னுடைய பழைய யுத்தியை விக்ரம் படத்திலும் செயல்படுத்தி இருக்கிறார் .

அந்த வகையில் விக்ரம் படத்தில் பிரபல முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில்  இணைந்து நடித்துள்ளனர் . அதுமட்டுமல்லாமல் நடிகர் சூர்யாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனால் இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது..

.

You might also like

Leave A Reply

Your email address will not be published.