இந் த முன் னணி நடிக ருட ன் நடி ப்பத ற்கு பல வருட ங்களா க காத் திருக் கும் க மல் ..!! பிடிக் கொ டுக்கா மல் இருந் து வரு ம் நடிக ர் ..!! பே ட்டியி ல் வெ ளிப்ப டை யாக கூறி ய க ம ல் ..!!

0 173

தற்போது கமல்ஹாசன் நீண்ட வருடங்களுக்கு பிறகு விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார் . இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன்  போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல்நடிகர் சூர்யாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் . மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் .

இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இப்படி மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவான திரை படத்தின் புரமோஷனை முழுவீச்சில் செய்து வருகிறார் கமல்ஹாசன் . அந்த வகையில் புரமோஷனுக்காக கேரளாவிற்கு சென்றுள்ளார் கமல் . அப்போது மோகன்லால் தொகுத்து வழங்கிய,

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .இதன் பிறகு பேசிய கமல்ஹாசன் கூறியதாவது , மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் தான் நடிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார் . மேலும் மலையாள பிரபல நடிகரான மோகன்லாலுடன் இணைந்து உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமல் நடித்திருந்தார்.

ஆனால் மம்முட்டியுடன் இதுவரை இணைந்து நடிக்கும் வாய்ப்பு கமலுக்கு அமையவில்லை .இதைப்பற்றி பலமுறை நானும் அவரும் படத்தின் கதையை பற்றி விவாதிப்போம் . ஆனால் அந்த கதைகள் எதுவும் எங்களுக்கு தகுந்தார் போல இருக்காது . அப்படியும் நான் அதில் திருப்தி அடைந்தாலும் கொஞ்சம் பொறுங்கள்,

நல்ல கதையாக அமையட்டும் என்று மம்முட்டி மறுத்துவிடுவார் . ஆனால் கண்டிப்பாக விக்ரம் படத்தின் ரிலீஸுக்கு பிறகு மம்முட்டி என்னுடன் நடிப்பதற்கு சம்மதிப்பார் என்று முழுமையாக நம்புகிறேன் என்று கமல் கூறியிருந்தார் . இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.